தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம்

தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-12-06 12:28 GMT

தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி  அரையாண்டுத் தேர்வுகள் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திரமாநிலத்தின் நெல்லூர் பகுதியில் கரை கடந்து சென்று விட்டது. ஆனால் அந்த புயல் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏற்படுத்திய தாக்கம் சுவடுகளாக இன்னும் அப்படியே தான் உள்ளது.

புயல் சின்னம் உருவானதால் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில்  கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை நகரின் பிரதான சாலைகளில் தேங்கிய தண்ணீர் கூட இன்னும் முழுமையாக வடியவில்லை. புறநகர் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் செல்லுவதற்கு வழியின்றி தேங்கி நிற்பதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் டிசம்பர் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும்.

டிச.11 முதல் குறிப்பிட்ட நாட்களில் எந்த மாற்றமும் இன்றி தேர்வுகள் நடைபெறும்  என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவித்து உள்ளார்.

Tags:    

Similar News