கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து புதிய கால அட்டவணை

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் படியான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த புதிய கால அட்டவணையை கே.வி சங்கதன் அமைப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-06-12 15:27 GMT

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து புதிய கால அட்டவணை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து புதிய கால அட்டவணை

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பாடத்திட்டத்தின் படியான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து புதிய கால அட்டவணையை கே.வி சங்கதன் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் படி நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீட்டில் பொதுமக்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கே.வி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நடப்பு ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு நடவடிக்கைகள் அமலில் உள்ளதால் மாணவர் சேர்க்கை முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட இருக்கிறது. கே.வி சங்கதன் அமைப்பு 2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள கே.வி பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, உரிய விதிகளின் படி தகுதி பெற்றவர்களின் முதல் பட்டியல் ஜூன் 23ம் தேதி வெளியிடப்படும். 2ம் பட்டியல் ஜூன் 30ம் தேதியும், 3ம் பட்டியல் ஜூலை 5ம் தேதியும் வெளியிடப்படும்.

முன்னுரிமை அடிப்படையில் உள்ளவர்களின் பட்டியல் ஜூலை 2ம் தேதி வெளியிடப்படும். இவற்றில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 8 முதல் 12ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யப்பட்டு, ஜூலை 13 முதல் 16ம் தேதிக்குள் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும். 2ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பட்டியல் ஜூன் 24ம் தேதி வெளியிடப்படும். 11ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பினருக்கும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர், 10 நாட்களில் விண்ணப்ப பதிவு தொடங்கி 11ம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News