சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

Update: 2021-07-30 05:25 GMT

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் 30 சதவீதமும், 12ஆம் வகுப்பு பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மதிப்பெண் முடிவுகளை இன்று பிற்பகல் 2 மணிக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News