cbse 10th result 2023 சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது, கேரளா முதலிடம்
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம். 10ம் வகுப்பிலும் திருவனந்தபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
சிபிஎஸ்இ 2023 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில், results.cbse.gov.in மற்றும் cbseresults.nic.in இல் அறிவித்தது,
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான முடிவுகளை மாணவர்கள் இப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் முடிவுகளைச் சரிபார்க்கக்கூடிய சில இணையதளங்களைப் பார்க்கவும்.
cbse.gov.in
results.nic.in
results.digilocker.gov.in
umang.gov.in
போர்டு தேர்வு எழுதிய 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டது. இந்த ஆண்டு மொத்தம் 21,86,940 பேர் தேர்வெழுதினர். 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மொத்தம் 38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வுகள் பிப்ரவரி 15, 2023 முதல் மார்ச் 21, 2023 வரை நடைபெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் போக்குக்கு ஏற்ப, இந்த ஆண்டும் 1,95,799 மாணவர்கள் 90% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பிலும் திருவனந்தபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல், இந்தியா முழுவதும் 44,297 மாணவர்கள் 95% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு, CBSE 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 93.12% ஆக உள்ளது, இது 2019 ஆம் ஆண்டில் கடந்த கோவிட் போர்டு தேர்வான 91.10% தேர்ச்சி சதவீதத்தை விட சிறந்தது.
அதே போல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாக 99.14% தேர்ச்சி விகிதம் பெற்று சென்னை இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 12 மற்றும் 10 ஆகிய இரண்டு வகுப்புகளின் CBSE பொதுத்தேர்விலும் திருவனந்தபுரம், பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய பகுதிகள் முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.