பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு..

Bharathidasan History in Tamil-"தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்று, தமிழின் அருமையை பெருமைபட பேசிய பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக அறிந்து கொள்வோமா?

Update: 2022-06-04 03:30 GMT

Bharathidasan History in Tamil

Bharathidasan History in Tamil-பாரதிதாசனை நாம், 'புரட்சிக்கவி' என்றும், 'பாவேந்தர்' என்றும் அழைக்கிறோம். 1981ம் ஆண்டு ஏப்ரல் 29ல் புதுச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர், சுப்புரத்தினம் ஆகும். தந்தை, கனகசபை முதலியார்; தாய் இலக்குமி அம்மாள்.

பாரதிதாசன், இளம் வயதில் இருந்தே தமிழ் மொழி மீது தீராக் காதல் கொண்டிருந்தார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார்.

தனது 16வது வயதில், புதுச்சேரி கல்வே கல்லூரியில் சேர்ந்து, மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

பாரதிதாசன், 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்தார். நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்ட பாரதிதாசன், மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடம் இருந்து பாராட்டுக்கள் பெற்றார். அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை 'பாரதிதாசன்' என்று மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசனின் இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்கள், திரைப்படங்களுக்கு கதை - வசனம் எழுதும் வாய்ப்பினை நல்கினர். 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

எண்ணற்ற படைப்புகளை, பாரதிதாசன் எழுதியுள்ளார். சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு கொள்கை கொண்டவர். இவரது நூல்களில் முக்கியமானவை, 'பாண்டியன் பரிசு', 'எதிர்பாராத முத்தம்', 'குறிஞ்சித்திட்டு', 'குடும்ப விளக்கு', 'இருண்ட வீடு','பிசிராந்தையார்', 'விடுதலை வேட்கை' உள்ளிட்டவையை குறிப்பிடலாம்.

தமிழுக்கு அருந்தொண்டு புரிந்த, பன்முகக் கவிஞாரன பாரதிதாசன், ஏப்ரல் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News