அவினாசி அரசு கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.;
இக்கூட்டத்தை, கல்லூரி முதல்வர் முனைவர் ஜோ நளதம் தலைமையேற்று, பெற்றோர் ஆசிரியர் கழகத்தை பற்றி அதன் நன்மைகளைப் பற்றியும் விவரித்தார். சேமிப்பு பழக்கத்தை பற்றியும், கல்லூரிச் சூழல் பற்றியும் விவரித்தார்.
கணினி அறிவியல் துறை தலைவர் ஹேமலதா வரவேற்புரை வழங்கினார். இயற்பியல் பேராசிரியர் முனைவர் பாலமுருகன், கல்லூரியின் தேவைகள், நிதி நிலைமைகள் பற்றி விளக்கிக் கூறினார். கல்லூரியின் தேவைகள் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு பற்றி விவரிக்கப்பட்டது. கல்லூரியின் வளர்ச்சிக்காக பணிகளைப் பற்றி பெற்றோரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.
பெற்றோர்கள் தாமாக முன்வந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்காக பங்களிப்பு வழங்குவதாக வாக்களித்தனர். பெற்றோர்கள் இக்கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளை கொண்டுவர கோரிக்கை வைத்தனர்.பெற்றோரின் வினாக்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பதில் அளித்தனர். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.செல்வதரங்கினி நன்றி கூறினார்.