யூபிஎஸ்சி தேர்வர்களுக்கு வயது தளர்வு: மத்திய அமைச்சர் விளக்கம்

தற்போது உள்ள விதிகளை மாற்ற முடியாது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-31 01:55 GMT

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

யூபிஎஸ்சி தேர்வு எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு தொடர்பாக தற்போது உள்ள விதிகளை மாற்ற முடியாது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக குடிமைத் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது தொடர்பாக கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

ரிட் மனுக்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் அந்தக் கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விவகாரம் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு தொடர்பான தற்போதைய விதிகளை மாற்றுவது சாத்தியமாகவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: அப்ஜெக்டிவ் வகைத் தேர்வைப் பொறுத்தவரை தேர்வின் முழு செயல்முறைக்குப் பின்னரே பதில்கள் அறிவிக்கப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட அதன் வருடாந்திர நாட்காட்டியைக் கடைப்பிடிப்பதற்காக நியாயமான காலக்கெடுவில் முடிவுகளை வெளியிடுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விடைத்தாள்களை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று யூபிஎஸ்சி மேலும் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News