நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பெற்று சாதனை

மருத்துவ இளநிலை படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு சற்று நேரத்திற்கு முன் வெளியாகி உள்ளது.

Update: 2023-06-13 16:30 GMT

கோப்புப்படம் 

2023-2024 ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. சரியாக 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை விண்ணப்பித்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேரில் 78 ஆயிரத்து 693 பேர் இந்த ஆண்டு தகுதி பெற்றுள்ளனர். மேலும் தமிழக ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் முதல் 10 பேரில் 4 மாணவர்கள் தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News