12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியீடு
12th Exam Result -12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது;
12th Exam Result -10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பில் 93 சதவீதம் பேரும், பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு 91 சதவீதம் பேரும், 2019 ஆம் ஆண்டு 91.3% பேரும், 2020 ஆம் ஆண்டு 92.3 பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த முறை அதிகபட்சமாக 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதேசமயம் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு கடந்த ஜூலை 25ஆம் தேதி துணை தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்திருந்த மாணவர்களுக்கு இம்மாதம் 2ஆம் தேதி துணை தேர்வுகள் நடத்தப்பட்டன.
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல் மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால், ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2