இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று

News For School Students - தமிழகத்தில் இன்று முதல் 10,+2 தற்காலிக மதிப்பெண் சான்று பெறலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Update: 2022-06-24 05:33 GMT

News For School Students -தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில் ஜூலை 27ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 2ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையதளம் https://www.dge.tn.gov.in/ மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது . தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News