பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-10-14 05:14 GMT

தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

அதன்படி, பிளஸ்-2 செய்முறை தேர்வு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 செய்முறை தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை

03.03.2025 - திங்கள்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்

06.03.2025 - வியாழக்கிழமை - ஆங்கிலம்

11.03.2025 - செவ்வாய்க்கிழமை - கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)

14.03.2025 - வெள்ளிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

18.03.2025 - செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

21.03.2025 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்கு, புவியியல்

25.03.2025 - செவ்வாய்க்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள்.

2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

05.03.2025 - புதன்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்

10.03.2025 - திங்கள்கிழமை - ஆங்கிலம்

13.03.2025 - வியாழக்கிழமை - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

17.03.2025 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

20.03.2025 - வியாழக்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

24.03.2025 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)

27.03.2025 - வியாழக்கிழமை - வேதியியல், கணக்கு, புவியியல்.

2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை

28 - 03 - 2025 - வெள்ளிக்கிழமை - தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்

02 - 04 - 2025 - புதன்கிழமை - ஆங்கிலம்

04 - 04 - 2025 - வெள்ளிக்கிழமை - விருப்ப மொழிப் பாடம்

07 - 04 - 2025 - திங்கள்கிழமை - கணிதம்

11 - 04 - 2024 - வெள்ளிக்கிழமை - அறிவியல்

15 - 04 - 2025 - வியாழக்கிழமை - சமூக அறிவியல். 

Tags:    

Similar News