10, 12ம் வகுப்பு நேரடி தேர்வுகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
10, 12ம் வகுப்புக்கான நேரடி தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.;
உச்சநீதி மன்றம் ( பைல் படம்)
கொரோனா காரணமாக வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் பெருமளவு நடத்தப்படவில்லை. இதற்கிடையில் பொதுத்தேர்வுகளை நேரடியாக நடத்துவது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்றும் நேரடி தேர்வு இல்லாமல் மாற்று மதிப்பீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ஆஃப்லைன் முறையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தார். இத்தகைய மனுக்கள் மாணவர்களிடம் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.