தென்காசியில் தொ.மு.ச பெயர் பலகை: கனிமொழி எம்பி திறந்து வைப்பு
தென்காசி போக்குவரத்து பணிமனை முன்பு தொ.மு.ச பெயர் பலகை மற்றும் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
தொமுச பெயர் பலகை மற்றும் கொடி கனிமொழி எம்பி திறந்து வைப்பு.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்காக திமுக மகளிர் அணி செயலாளர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருகை தந்தார். அவருக்கு தென்காசி நகர எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தென்காசி போக்குவரத்து பணிமனை முன்பு பெயர் பலகை மற்றும் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை, தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், தொமுச செயலாளர் திவான் ஒலி, மாவட்டத் துணைச் செயலாளர் ஐயா நடராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.