தமிழக காவல்துறையின் எச்சரிக்கை

அம்புட்டு பேர் மீதும் வழக்கு

Update: 2021-05-14 13:17 GMT

கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது  நாளை முதல் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.  தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வருபவர்கள், நடமாடுபவர்கள் அம்புட்டு பேர் மீதும் வழக்கும்,ஸ்பாட் தண்டனையும் உண்டு.

கொடிய தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கொரோனா பரவாமல் இருக்க முககவசம் அணிவது கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 10 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கடந்த 4 நாட்களாக ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் மேற் கூறிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர். அறிவுரைகளை பொதுமக்கள் ஒரு சிலர் சரியாகவும் ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது

நாளை முதல் அதாவது 14 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீதும் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கப்படுகிறது.


தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி தீவிரமாக பரவி வரும் இக்காலகட்டத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதில்  இருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்துக் கொள்ளும் படியும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News