காயகல்ப் விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை

செங்கோட்டை அரசு மருத்துவமனை மத்திய அரசின் காயகல்ப் விருதை பெற்றது.

Update: 2021-06-30 09:34 GMT

மத்திய அரசின் காயகல்ப் விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே சிறந்த தூய்மையான மருத்துவமனைக்கான மாநில அளவில் முதல் பரிசையும், மத்திய அரசின் காயகல்ப் விருதையும் வென்றுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத்துறையை சேர்ந்த 5 நபர் கொண்ட குழு தமிழகத்தில்  உள்ள மொத்த மருத்துவமனைகளிலும் ஆண்டு தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு  தர பட்டியல் தயார் செய்யும். மருத்துவமனையின் சுற்றுப்புறத்  தூய்மை மற்றும் மருத்துவமனையின் வெளிப்படையான தன்மை  ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் புள்ளிகள் வழங்கப்படும். அந்த  புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கை  மத்தியரசுக்கு தாக்கல் செய்யப்படும்.

இந்த தரப்புள்ளிகளின் அடிப்படையில் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம்பிடித்த மருத்துவமனைக்கு காயகல்ப் எனும் மிக உயரிய  விருதினை மத்திய அரசு  வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. அந்தவகையில், செங்கோட்டை அரசு மருத்துவமனையானது தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் கடந்த (2017- 18, 2018 -19 ,2019 -20) ஆகிய மூன்று வருடங்களிலும் தொடர்ந்து ஆறுதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் பெற்றது.

இந்நிலையில் 2020-21 ஆண்டிற்கான விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரக் குழு பரிந்துரைப்படி இதுவரை 4 குழுக்கள் இந்த மருத்துவமனையினை ஆய்வு மேற்கொண்டன.  இது வரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 99.3% தர புள்ளிகளை பெற்று இந்த ஆண்டு ( 2020- 21) மாநில அளவில் முதல் பரிசுத்தொகையான  ரூபாய் 15 லட்சத்தை வென்றுள்ளது. மத்திய அரசின் சிறந்த மருத்துவமனைக்கான காயகல்ப் விருதும் கிடைத்துள்ளது.

 தலைமை மருத்துவர்,மற்றும் ஏனைய மருத்துவர்கள், அனைத்து பணியாளர்கள் ஆகியோரின் உழைப்புக்கு கிடைத்த ஒரு சிறந்த அங்கீகாரமாக இந்த காயகல்ப் விருது கிடைத்துள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.  மருத்துவமனை வளாகத்தில் நூலகம், தொழிற்கூடம், பொதுமக்கள், நோயாளிகள் அமரவும், ஓய்வு எடுக்கவும், மேற்கூகள், அமரும் நாற்காலிகள், மூலிகைத்தோட்டம், மருத்துவமனையில் சிறுவருக்கான விளையாட்டு பூங்கா, மருத்துவமனையை சுற்றி தோட்டம் போல் பராமரிக்க்கப்படும் செடிகள் என  எந்த இடத்திலும் அசுத்தமின்றி வளாகம் முழுவதும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவது தனி சிறப்பாக உள்ளது.

Tags:    

Similar News