கனமழை எதிரொலி: 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக, திருச்சி, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-10-29 02:15 GMT

கனமழை காரணமாக, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,  தூத்துக்குடி, நெல்லை  மாவட்டங்களில்  இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருவாருர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை நீடித்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் திருச்சி, தஞ்சை,  நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News