முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம்...

அமைச்சரவையின் முதல் கூட்டம்.;

Update: 2021-05-09 02:30 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது; கொரோனா பரவல், முழு ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் கவர்னர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதல்நாள் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது. காய்கறி, மளிகை கடைகள், பால் கடைகள் ஆகியன மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காலை 11.30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதாவது 10-ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், கொரோனா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News