தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: இன்றும் நாளையும் அதிகனமழை பெய்யுமிடங்கள்
டெல்டா மாவட்டங்கள், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 தினங்களுக்கு அதிகனமழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.;
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகலில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இலங்கை அருகே, தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழகத்தில் அதிகனமழை பெய்யும். இன்றும் நாளையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். எனவே, போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதற்காக, ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் மழை தொடரும்
அதேபோல், கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ,தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர் ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.