பீட்டர் அல்போன்ஸ் மனைவி மறைவு- இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்
கண்ணியம் காக்கும் கழகம்
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா, 71, நேற்று காலமானார். அவரது மறைவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,வுமான பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு, இன்று மதியம், 12:00 மணிக்கு, சென்னை அண்ணாநகரில் உள்ள புனித லுாக்கா சர்ச்சில் நடைபெற உள்ளது.ஜெசிந்தா உடலுக்கு, தி.மு.க., துணை பொதுச் செயலர் ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ஷாநவாஸ் எம்.எல்.ஏ., -த.மா.கா., தலைவர் வாசன் மற்றும் தி.மு.க., - காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அவரின் இறுதி நிகழ்வில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.