தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது: சுகாதார செயலர்

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருவதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-04-24 07:12 GMT

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் போதுமான அளவில் படுக்கை வசதிகள் உள்ளதாகவும் என படுக்கைகள் கிடைக்காது என்று யாரும் அச்சம் அடைய வேண்டாம் என தெரிவித்தார்.

ரெம்டிசிவிர் மருந்தை மக்கள் தாமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், மருத்துவரின் பரிந்துரைப்படி தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா கட்டண கட்டுப்பாடுகள் உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்த கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News