சென்னை 44 வது செஸ் ஒலிம்பியாட் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை
Chess Olympiad India- செஸ் ஒலிம்பியாட் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
Chess Olympiad India- சென்னை; சென்னை மாமல்லபுரத்தில்28ந்தேதியன்று ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் 28ந்தேதி சென்னை வருகிறார்.
செஸ்ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டமானது நேற்று முதல்வர் ஸ்டாலின்தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இப்போட்டியானது இம்மாதம் 28 ந்தேதி துவங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ந்தேதி வரை நடக்க உள்ளது. இது 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியாகும். இப்போட்டி குறித்த விழிப்புணர்வினை தமிழக அரசு கடந்த சில மாதங்களாகவே பல விதங்களில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேப்பியர் பாலத்தினை செஸ் கட்டங்களினால் வடிவமைத்திருப்பதை பொதுமக்கள் பலரும் கண்டுவியந்து செல்பி எடுத்து செல்கின்றனர்.
இப்போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் , பஸ் வசதி, வீரர்கள் தங்க வசதி, பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு வசதி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்ய நாதன், மதிவேந்தன், ஆகியோர் முதல்வரிடம் விளக்கி கூறினர். இப்போட்டிக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. 4 மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடுவது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் இப்போட்டிக்கான தனி இணையதளம் துவங்குவது குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் இப்போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்தும் கேட்டார். கூட்டத்தில், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித்துறை செயலர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் தாரேஸ் அகமது மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2