சேலம்: கூட்டுறவு சங்க தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சேலத்தில், தமிழ்நாடு கூட்டுறவு சங்க மாநில தலைவர் இளங்கோவன் வீடு, அலுவலகம் உள்பட, அவருக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார், இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-10-22 02:45 GMT

தமிழ்நாடு கூட்டுறவு சங்க மாநில தலைவராக இருப்பவர் இளங்கோவன். இவர், முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர். அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார்.

இவரது வீடு, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ளது. அங்குள்ள அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய 27 இடங்களில், இன்று காலை முதல், லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாக, இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் மீது சேலம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News