75 வது ஆண்டு சுதந்திர தினத்தைமுன்னிட்டு தேசிய கொடிகளை ஒரு கோடி வீடுகளுக்கு வழங்க தமிழக பா ஜ திட்டம்
நாடு சுதந்திரம் அடைந்து 75 வது சுதந்திர தினத்தை விரைவில் கொண்டாட உள்ளோம்.அதன் நினைவைப் போற்றும் வகையில் தமிழக பாஜ சார்பில் 1 கோடி வீடுகளுக்கு தேசியக்கொடியினை வழங்க திட்டமிட்டுள்ளது.;
1crore national flag /distribution bjp planதமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒரு கோடி வீடுகளுக்கு தேசிய கொடிகள் வழங்க அக்கட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதுரு.
இந்தியாவின் 75 வது சுதந்திரதினமானது இம்மாதம் 15 ந்தேதியன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இன்று முதல் சோஷியல்வெப்சைட் பக்கங்களில் தேசியக்கொடியினை 15 ந்தேதி வரை வைக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிவேண்டுகோள் விடுத்ததன் வாயிலாக அதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 13 ந்தேதி முதல் ஆகஸ்ட் 15 ந்தேதி வரை வீடுகள் தோறும் தேசிய கொடியினை பறக்கவிட்டு 75 வது சுதந்திர தின நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
1crore national flag /distribution bjp planதமிழகத்திலுள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தேசிய உணர்வு ஊட்டவும், இவ்விழாவில் அவர்களையும் பங்கேற்க செய்யவும், அனைத்து வீடுகளிலும் உள்ளவர்களை சந்தித்து இதுகுறித்து எடுத்து சொல்லி கொடிகளை வழங்க பாஜ திட்டமிட்டுள்ளது. பாஜ சார்பில் வழங்கப்படும் கொடியினை வீடுகளில் பறக்க விடவேண்டும்என வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளது.இதனை 1 கோடி வீடுகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர்களை பற்றி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தினவிழா 75 ம் ஆண்டையொட்டி பேச்சு போட்டி, சைக்கிள் பேரணி, நடைபயணம் ஆகியவற்றையும்நடத்த பாஜ சார்பில்ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது-
சோஷியல் வெப்சை முகப்பில் தேசிய கொடி
1crore national flag /distribution bjp planபாரத நாட்டின் சுதந்திரத்திற்காக அன்றைய தினம் அரும்பாடுபட்டு உயிரிழந்தவர்களின் நினைவு போற்றும் வகையிலும்,அடிமைத்தனமான ஆங்கிலேயர்களிடம்இருந்து சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையிலும், 75 வது ஆண்டைக்கொண்டாடும் நேரத்தில் அனைவரும்
'சோஷியல்வெப்சைட்களில் தங்கள் முகப்பு பக்கமாக தேசிய கொடியை அனைவரும் வைக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அதை ஏற்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என, அனைவரும் தங்கள் சமூக வலைதளங்களின் முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை நேற்று முதல் வைத்துள்ளனர். தமிழக பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தின் முகப்பிலும் தேசிய கொடி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.