ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரை தாக்கும் வெள்ளை வேர் புழுக்கள்
ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரை தாக்கும் வெள்ளை வேர் புழுக்களை அழிப்பது எப்படி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு வேளாண் இணை இய க்குனர் (பொறுப்பு) முருகேசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கரும்பை வெள்ளை வேர் புழுக்கள் தாக்கி சேதப்படுத்துகிறது. இப்பூச்சியின் தாய் வண்டு. இது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். கோடை மழை பெய்ததும் மண்ணில் இருக்கும் கூட்டு புழுக்களில் இருந்து வெளிவந்து கரும்பின் தூர் பகுதியில் முட்டையிடும். ஒரு தாய் வண்டு 30 முட்டையிடும். இதில் வெளிவரும் புழுக்கள் தூரை கடித்து சேதப்படுத்தும்.
வளர்ந்த புழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் சதை பற்றுடன் பிறை நிலவு வடிவில் காணப்படும். இவற்றின் தாக்கத்தால் கரும்பு வாடி, வதங்கி, காயும். இப்பழு பருவம் 2 மாதமாகும். இவை அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை மண்ணுக்குள் உறக்க நிலையில் இருந்து ஜூன், ஜூலையில் வெளிவந்து தாக்கும். இவை வேம்பு, முருங்கை, கருவேல மர ங்களில் கூட்டமாக அம ர்ந்து ஓய்வெடுத்து கரும்பை தாக்கும். வேம்பு, முருங்கை, கருவேல் மரங்களில் கூட்ட மாக காணப்படும் வண்டு களை கிளைகளை உலுக்கி விழ செய்து அவற்றை சேகரித்து தீயிட்டு அளிக்க வேண்டும். காய்ந்த தூருக்கு அடியில் உள்ள புழுவை கையால் சேகரித்து அழிக்க வேண் டும்.
2, 3 நாள் தண்ணீரை தேய்ப்பதால் அவை இறக்கும். விளக்கு பொறி ஏக்கருக்கு ஒன்று வைத்து தாய்வண்டை கவர்ந்து அழிக்கலாம். மெட்டாரைசீம் அனிசோ பிலியே என்ற பச்சை பூஞ் சாணம் ஏக்கருக்கு தேவை யான 2 கிலோ 200 கிலோ மத்திய தொழு உரம் மண் புழு உரத்துடன் கலந்து பயிருக்கு இட்டு மண் அமைக்கலாம். கரும்பின் வயது 10 மாதத்துக்கு மேல் இரு ந்தால் உடன் அறுவடை செய்யலாம். அதிக தாக்குதல் உள்ள இடத்தில் மாற்று பயிராக நெல்லைப் பயிரிட்டு பின் கரும்பு பயிரிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.