அத்திவெட்டி கிராம விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் பயிற்சி

மண்வள அட்டை இயக்கத்தின் கீழ், அத்திவெட்டி கிராம விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-02-09 05:00 GMT

அத்திவெட்டியில் வேளாண்துறை சார்பில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மூலம், மண்வள அட்டை இயக்கம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண் துறையின் கீழ், அனைத்து கிராம அண்ணா அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமமான அத்திவெட்டியில் வேளாண்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மூலம், மண்வள அட்டை இயக்கத்தின் சார்பில், வேளாண் உதவி இயக்குனர் கோமதி தங்கம் தலைமையில் அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.


மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, மண்வளம் காத்தலின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை அதிகப்படுத்துவதில் நுண்ணுயிர்களின் பங்கு மற்றும் ரசாயன உரங்களை குறைத்து இயற்கையான ஜீவாமிர்தம், மண்புழு உரம், மீன் அமினோ அமிலம் போன்றவைகளை பயன்படுத்தி, தென்னை முதலான பயிர்களில் குறைந்த செலவில், தற்சார்பு முறையில் சாகுபடி செய்வது குறித்து முன்னோடி இயற்கை விவசாயி ராமாம்பாள்புரம் கணேசன் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.

ரசாயன உரங்கள் தவிர்த்து இயற்கை உரங்களான கடல்பாசி உரம் திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் குறித்து சிறிய கருத்து காட்சியும், அட்மா திட்ட அலுவலர்கள் சுகிதா ராஜு ஐயா மணி ஆகியோர் செய்து இருந்தனர். அத்திவெட்டி கிராமத்தில் சிறப்பு முன்னெடுப்பாக, மண் பரிசோதனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை ஆய்வுக்கு வழங்கவும் வேளாண்மை அலுவலர் சாந்தி கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News