தென்னை மரம் ஏறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் காப்பீட்டுத் திட்டம்

இது விபத்துக் காப்பீடு பாலிசி. இதில் 1 லட்சம் ரூபாய் வரை மருத்துவமனைக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.;

Update: 2021-12-27 14:49 GMT

தென்னை மரம் ஏறுபவர்களுக்கும் மற்றும் பதனீர் இறக்கும் கலைஞர்களுக்கும் கூடுதல் "கேரா சுரக்ஷா" காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு ரூ.5 லட்சம். இது விபத்துக் காப்பீடு பாலிசி. இதில் 1 லட்சம் ரூபாய் வரை மருத்துவமனைக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. "தென்னை மர நண்பர்கள் பயிற்சித் திட்டம், பதனீர் இறக்கும் கலைஞர்கள் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முதலாண்டு பிரீமியம் தொகை ரூ.398.65-ஐ தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்கும்.

ஓராண்டு முடிந்ததும் பிரீமியம் தொகையில் 25 சதவீதம் ரூ.99-ஐ செலுத்தி பாலிசியை பயனாளிகள் புதுப்பித்துக் கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரையுள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம். இதற்கான விண்ணப்பத்தை வேளாண் அதிகாரி, பஞ்சாயத்துத் தலைவர், சிபிஃஎப் அலுவலக அதிகாரிகள், சிபிசி இயக்குனர்கள் ஆகியோர் கையெழுத்தைப் பெற்று எர்ணாகுளத்தில் மாற்றும் வகையில் ரூ.99 மதிப்புள்ள டிடி தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு அனுப்பி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் www.coconutboard.gov.in. என்ற இணைய தளத்தில் உள்ளது.

Tags:    

Similar News