/* */

பட்டுக்கூடு உற்பத்தியில் 3ம் இடம்: ராசிபுரம் பெண்ணுக்கு முதல்வர் பரிசு

மாநில அளவில் பட்டுக்கூடு உற்பத்தியில் 3ம் இடம் பெற்ற ராசிபுரம் விவசாயிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார். அவருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

பட்டுக்கூடு உற்பத்தியில் 3ம் இடம்: ராசிபுரம் பெண்ணுக்கு முதல்வர் பரிசு
X

மாநில அளவில் பட்டுக்கூடு உற்பத்தியில் 3ம் இடம் பெற்று, முதல்வர் ஸ்டாலினிடம் பரிசு பெற்ற, ராசிபுரம் விவசாயி கமலத்திற்கு, மாவட்ட கலெக்டர் ஸ்யோசிங் பாராட்டு தெரிவித்தார்.

ராசிபுரம் தாலுக்கா, மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம், விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில், மாநில அளவில் சிறந்த முறையில் பட்டுக்கூடு உற்பத்தி செய்த கமலத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் பாராட்டு பத்ததிரம் வழங்கினார். விவசாயி கமலம், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம், முதல்வர் வழங்கிய பரிசைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

நாமக்ககல் மாவட்டஅளவில் அதிக மகசூல் பெற்ற பட்டு விவசாயிகளுக்கு, பட்டு வளர்ச்சித்துறை சார்பில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு, சிறந்த பட்டு விவசாயிகளாக தேர்வு செய்யப்பட்ட, ராசிபுரம் தாலுகா, மூலக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி கமலத்துக்கு, முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், சேந்தமங்கலம் தாலுக்கா, மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபிக்கு 2ம் பரிசு ரூ.20 ஆயிரம், நஞ்சுண்டபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமிக்கு, 3ம் பரிசு ரூ. 15 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார். பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முத்துப்பாண்டி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 5 April 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்