/* */

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த ஒட்டுண்ணி விநியோகம்

மாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து மரவள்ளிப் பயிரை பாதுகாக்க புதிய ஒட்டுண்ணி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த ஒட்டுண்ணி விநியோகம்
X

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த, புதிய ரக ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 18,000 ஹெக்டர் பரப்பளவில், மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சியின் தாக்கம் அதிகரித்து, மகசூல் பாதித்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த மாப்பூச்சியை கட்டுப்படுத்த புதிய ரக ஒட்டுண்ணி அனகைரஸ் லோபெஸி நாமக்கல் வேளாண் அறிவில் நிலையமும், பெங்களுரில் உள்ள, தேசிய வேளாண் அமைப்பும் இணைந்து, முதற்கட்டமாக 50 விவசாயிகளுக்கு வழங்ப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் மைய தலைவர் அழகுதுரை, உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் நாச்சிமுத்து, தோட்டக்கலைத்து துணை இயக்குநர் கணேசன், மற்றும் வேளாண் இணை இயக்குநர் அசோகன் ஆகியோர் பேசினார்கள்.

தொடர்ந்து பெங்களூரில் உள்ள தேசிய வேளாண் அமைப்பின் முதன்மை விஞ்ஞானி மோகன் மாவுப்பூச்சிக்கான புதிய ரக ஒட்டுண்ணியை உற்பத்தி செய்யும் முறைக்கான கையேட்டை வெளியிட்டார். அந்த அமைப்பின் ஆலோசகர் சம்பத்குமார் புதிய ரக ஒட்டுண்ணியை வயல் வெளிவிடும் தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார். உதவி பேராசிரியர் சங்கர், புதிய ரக ஒட்டுண்ணிகளை பெருமளவில் விவசாயிகளே உற்பத்தி செய்துகொள்ளலாம் என்பதை விளக்கி கூறினார். முடிவில் உதவி பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். திரளான மரவள்ளி சாகுபடி விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!