தேர்தல் சட்டங்கள் எல்லாம் எதிர்க்கட்சிக்கு மட்டும் தானா: ஜெயக்குமார் கேள்வி
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
தேர்தல் சட்டங்கள் எல்லாம் எதிர்க்கட்சிக்கு மட்டும்தானா? என்றார் முன்னாள் அமைச்சர். டி.ஜெயக்குமார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 49 ஆவது வார்டில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருநாவுக்கரசு, மற்றும் 50 ஆவது வார்டில் போட்டியிடும் சதீஷ்குமாரை ஆதரித்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அதிருப்தியையும் வெறுப்பையும் திமுக அரசு பெற்றுள்ளதால் செல்லும் இடங்கள் எல்லாம் கழகத்திற்கு மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். நாங்கள் மகத்தான வெற்றியைக் கண்டிப்பாக பெறுவோம்..நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதற்கான சட்டப்பூர்வ போராட்டங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே ஒழிப்பதாக கூறுவது விநோதமாக உள்ளது.
கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளது..தேர்தல் சட்டங்கள் எல்லாம் எதிர்கட்சிக்கு தான் ஆளுங்கட்சிக்கு இல்லை என்பதாகவே இருக்கிறது . சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதால் திமுகவினர் மக்களை சந்திக்கவில்லை, அவர்கள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வெளியே சென்றால் கேள்வி கேட்பார்கள் என்று பயந்துகொண்டு ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசுகிறார். இதன் மூலம் அவர் அழகை நீங்கள் பார்க்கலாம். இதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது.
உங்கள் பாணியில் கேட்கிறேன். எங்களை நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது கேட்டீர்களே.. திராணி,தெம்பு.தைரியம் இருக்கா என்று. அதே கேள்விகளை இப்போது நங்கள் உங்களைக் கேட்கிறோம். மக்களை சந்திக்க திராணி இருக்கா, தெம்பு இருக்கா, தைரியம் இருக்கா.திராணி, தெம்பு இருந்தால் மக்களை சந்திக்க வேண்டியது தானே?
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஸ்டாலின் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்காமல் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆடு தன் குட்டியை இறக்கி ஆழம் பார்ப்பது போல் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கிவிட்டு ஆழம் பார்க்கிறார்.எது எப்படி இருந்தாலும் மக்கள்தான் இறுதி தீர்ப்பாளர்கள். என்றார் தொடர்ந்து செய்தியாளர்கள் பாஜக அலுவகத்தில் குண்டு வீச்சு சம்பவம் குறித்து கேட்ட கேள்விக்கு..
நீட் தேர்வு குறித்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அதற்காக எல்லாம் வன்முறையை கையாளக் கூடாது. வன்முறையை ஊக்குவிக்க கூடாது.. முறையாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu