/* */

நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது : எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்றார் முன்னாள் முதல்வர்

HIGHLIGHTS

நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது : எடப்பாடி பழனிசாமி
X

நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், வெளியில் நீட் தேர்வுக்கு அதிமுக தான் காரணம் என திமுக கூட்டணி கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கரை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை.உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே நீட் தேர்வை நடத்த வேண்டிய சூழலில் அன்றைய அதிமுக அரசு இருந்தது இன்றும் நீட் தேர்வும் நடைபெறுகிறது.திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் நீட் தேர்வு எனும் வார்த்தையே அறிமுகமானது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும்.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செல்லும் போது சட்டவல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு சட்ட ரீதியாக இந்த பிரச்னையை அணுக வேண்டும். சட்ட வல்லுநர்கள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும். ஏனென்றால் இது மாணவர்களின் உணர்வு பூர்வமான பிரசனை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Feb 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்