உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!

உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
X

உலகை அசத்தும் இஸ்ரேலின் பாதுகாப்பு முறை (கோப்பு படம்)

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனை போர் ஒன்றை செய்திருக்கின்றது இஸ்ரேல்.

இனி எந்த நாட்டாலும் அதனை தொட முடியாது உலகமே திரண்டாலும் தாக்குப் பிடிக்க முடியும் என அதிசயிக்க வைத்திருக்கின்றாகள். அப்படி ஒரு மகா ஆச்சரியம் அவர்களைத் தவிர யாருக்கும் சாத்தியமில்லை.

ஈரான், இஸ்ரேல் மேல் தொடுத்தது சாதாரண தாக்குதல் அல்ல. இன்னொரு நாடென்றால் மொத்தமாக நொறுங்கியிருக்கும். அப்படிப்பட்ட பலத்த பாய்ச்சல் அது.

சுமார் 300 ஆளில்லா விமானங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், குருயீஸ் ரக ஏவுகணைகள் என மொத்தமாக 500 புலிகள் பாய்ந்தது போல் பாய்ந்து தாக்கியது ஈரான். ஆனால் ஒன்றுகூட இஸ்ரேலை தாக்காத அளவு அதன் வான்பாதுகாப்பு சாதனங்கள் 500 ஏவுகணைகளையும் அசால்ட்டாக முறியடித்திருக்கின்றன. இது எந்த நாட்டாலும் முடியாத விஷயம்.

உலகின் மிகசக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு சாதனமென எஸ் 400 சிஸ்டத்தை சொல்லி பல நாடுகளின் தலையில் கட்டி விட்டது ரஷ்யா. ஆனால் உக்ரைனிய ஏவுகணைகளுக்கும் ஆளில்லா விமான தாக்குதலுக்கும் பதில் சொல்லமுடியாமல் எஸ்.400 தவிக்கிறது. இதனால் தன் தொழில்நுட்ப தோல்வியில் தலைகுனிந்து நிற்கின்றது ரஷ்யா.

அமெரிக்காவின் பாட்ரியாட் சிஸ்டம் உக்ரைனில் 80 சதவீதம் மட்டுமே தாக்கு பிடிக்கிறது. அந்த நாட்டுக்கும் முழு வெற்றி அல்ல. ஆனால் இஸ்ரேல் அசத்துகின்றது, அது பல அடுக்கு வான் கவசங்களை அயன்டோம், டேவிட் ஸ்லிங், ஏரோ என உருவாக்கி தன்னை தற்காத்திருக்கின்றது.

இது யாரால் சாத்தியம்? எப்படி சாத்தியம் என்றால் இதற்கு உதவியர்கள் இருவர். ஒருவர் சதாம் உசேன். இன்னொருவர் இதே ஈரான்தான். இஸ்ரேலிடம் 1990க்கு முன் இப்படி சிந்தனை இல்லை. 1991ல் வளைகுடா போரில் சதாம் தன் ஸ்கர்ட் ரக ஏவுகணைகளால் இஸ்ரேலை தாக்கினார். இஸ்ரேலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஈராக் தாக்கியிருந்தால் இஸ்ரேல் அன்றே காலியாகியிருக்கும்.

அந்த நாட்டின் நல்ல நேரம் ஈராக்கிடம் ஸ்கட் ரக ஏவுகணைகள் போதிய அளவு இல்லை. இதனால் பிழைத்துக் கொண்ட இஸ்ரேல், அப்போதே விழித்துக்கொண்டது. தன்னை சுற்றி உள்ள ஆபத்தை உணர்ந்து தற்காத்துக் கொள்ளத் தயாராகி விட்டது. அதன் பலனே இன்று இஸ்ரேல் உலக அளவில் சிறந்த பாதுகாப்பு சாதனத்தை உருவாக்கி உள்ளது. இஸ்ரேலின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுத்ததையும் மறந்து விடக்கூடாது.

வான் பாதுகாப்பு சாதனம் செய்து விட்டர்கள் சரி. எப்படி சோதிப்பது? அங்கே தான் ஈரான் கைகொடுத்தது. அது ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹவுத்தி என பல டஜன் கோஷ்டிகளை உருவாக்கி ராக்கெட்டுகளை கொடுத்து இஸ்ரேலை நோக்கி ஏவச் சொன்னது. இஸ்ரேல் இங்கேதான் தன்னை பலபடுத்தி தன் சோதனைகளை செய்து தவறுகளை சரிசெய்து, சரி செய்து வலுவானார்கள்.

நிச்சயம் இஸ்ரேலுக்கு ஹமாஸ், ஹெஸ்புல்லா எல்லாம் கொசுவுக்கு சமம். ஒரே இரவில் முடித்து விடலாம். இந்த இயக்கங்கள் எல்லாம் சில துப்பாக்கிகள், ராக்கெட்டுகளைத் தவிர ஏதுமில்லா இயக்கம். ஈரான் தன்னை அதிபுத்திசாலியாக கருதி அவைகளுக்கு ராக்கெட்டும் ஏவுகணைகளும் கொடுத்து இஸ்ரேலை தாக்கச் சொன்னது.

ஆனால் தந்திரகார இஸ்ரேல் அவர்களை கொண்டே தன் கருவிகளை தொழில்நுட்பத்தை பலப்படுத்தியது. நிச்சயம் ஹமாஸோ, ஹெஸ்புல்லாவோ இல்லை என்றால் இவற்றை சோதிக்க இஸ்ரேலுக்கு வேறு இடங்கள் இல்லை. பின் ஒருநாளில் ஈரான் தாக்கும் போது இஸ்ரேல் வீழ்ந்திருக்கும். ஈரான் தனக்கு விரித்த வலையினையே பலமாக்கி, பலம் பெற்று இப்போது ஈரானின் தாக்குதலை முறியடித்து கம்பீரமாக நிற்கின்றது.

ஈரானின் மிரட்டல் இது தான். இந்த மிரட்டலில் தான் அது அரசியல் செய்து கொண்டிருந்தது. எங்களிடம் நீண்டதூர ஏவுகணைகள் ஆளில்லா விமானம் உண்டு. அதைக் கொண்டு இரண்டாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் இஸ்ரேலை நொறுக்குவோம் என 30 ஆண்டாக சொல்லிகொண்டே காலம் கடத்தி வந்தது ஈரான். இப்போது மொத்தமாக நொறுங்கிப்போய் நிற்கிறது. ஈரானின் 30 ஆண்டுகால மிரட்டலை நொறுக்கி போட்டு புன்னகைக்கின்றது இஸ்ரேல்.

ஈரான் மட்டும் ஹெஸ்புல்லா, ஹமாஸ் என வளர்த்து ஆயுதங்களை கொடுத்திரா விட்டால் இப்படி இஸ்ரேல் பலம்பெற்று நிற்க முடியாது. ஆக ஈரான் வளர்த்த இயக்கங்களை கொண்டே பலம் பெற்று அதில் தன்னை சோதித்து இப்போது ஈரான் முகத்திலே போட்டுவிட்டது இஸ்ரேல். அறிவும் சாதுர்யமும் என்றால் இதுதான்

இப்போதும் பாருங்கள். இஸ்ரேல் ஹமாஸை அடிப்போம் என படம் காட்டுகின்றார்களே, தவிர முழுக்க அழிக்க மாட்டார்கள், அப்படியே ஹெஸ்புல்ல்லாவினையும் தொடமாட்டார்கள். மிரட்டிக் கொண்டே இருப்பார்கள். காரணம் இவர்களை ஒழித்து விட்டால் அமைதி வரும். அமைதி வந்தால் பாலஸ்தீனம் கொடுக்க வேண்டிவரும். தன் புதிய தொழில்நுட்ப ஆயுதங்களை சோதிக்கவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத, இனி 50 வருடத்துக்கு யாரும் நெருங்கி பார்க்கவும் முடியாத அதி உச்ச தொழில்நுட்பத்தில் பெரும் பலத்தில் இஸ்ரேல் நிற்கின்றது

இப்படி ஒரு வலிமையும் பலமும் தொழில்நுட்பமும் யாரிடமும் இப்போது இல்லை. வெளி தெரிந்தது இது என்றால் தெரியாதது எவ்வளவோ. இன்றைய தேதியில் ரஷ்யாவினை விட அவர்களின் தொழில்நுட்பம் பலநூறு மடங்கு பெரிது. இஸ்ரேலின் சாதனையினை உலகம் வாய்பிளந்து பார்க்கும் போது , அமெரிக்காவும் உள்ளே வந்து எல்லாம் எங்கள் உதவியால் வந்தது என சாதனைக்கு பங்குக்கும் வருகின்றது.

ஈரான் இனி அவர்களை தொடவோ , மிரட்டவோ முடியாது தன் தலையில் அடித்துகொண்டு அமர்வதை தவிர வழியில்லை. இப்படி உலகின் பலமான நாடான இஸ்ரேல் இந்தியாவின் நண்பன் என்பதும், உலக அரசியலில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அனுகூலம். இந்தியாவிற்காக இஸ்ரேல் என்ன வேண்டுமானாலும் செய்யும். காரணம் ‘மோடி’யின் வித்தை அப்படிப்பட்டது. ஆக மோடியின் வித்தை இந்தியாவிற்கும், உலகிற்கும் நல்லது தானே செய்யும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!