பூச்சிகள் இல்லாமல் மனிதன் வாழமுடியுமா..? தெரிஞ்சுக்கங்க..!

பூச்சிகள் இல்லாமல் மனிதன் வாழமுடியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
X

world pest day 2024 in tamil-உலக பூச்சிகள் தினம் (கோப்பு படம் )

பூச்சி இனங்கள் நம்மோடு இருக்க வேண்டியவைகள்தான். ஆனால் பூச்சிகளை நிர்வகிப்பதில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

World Pest Day 2024 in Tamil, Pest Control, Mosquito Control,Fly Killer,Rodent Control,Rat Control,Pest Management

ஜூன் 6, உலக பூச்சிகள் தினம் :

இந்த பூமியில் உருவான அத்தனை உயிரினங்களுக்கும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமைகள் உள்ளன. அவைகள் அதனதன் சூழலில் வாழ்வதற்கு இயற்கை அவைகளுக்கு இடங்களை கட்டமைத்துக் கொடுத்துள்ளது. அவைகளுக்கு ஏற்ற உணவை உருவாக்கி வைத்துள்ளது. எனவே, அவைகளை நாம் எந்த தொந்தரவும் செய்யாமல் வாழவிடவேண்டும். அவைகள் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும் என்பது இன்னொரு முக்கிய அம்சம்.

World Pest Day 2024 in Tamil

உயிரினங்களில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் தொடங்கி பாசி, பூச்சியினங்கள், பறவைகள்,விலங்குகள், தாவரங்கள் என அத்தனையும் அடங்கும். விலங்குகளில் மனிதனும் அடங்கிவிடுகிறான்.

மனிதரில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதைப்போலவே பூச்சி இனங்களில் நல்லவைகளும் உள்ளன. சில கெட்ட பூச்சிகளும் உள்ளன. ஆனால் அவைகள் தேடி வந்து நமக்கு தீங்கு செய்வதில்லை. நாம் கை வைக்காதவரை.

உலக பூச்சிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 6ம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக பூச்சிகள் தினம் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் பூச்சிகளால் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் அவைகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

World Pest Day 2024 in Tamil

நமது பூமியின் உயிரினத் தொகுப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன. அவைகள் அந்தந்த உயிரினத்தின் கடமைகளை இயற்கை கட்டமைத்துக் கொடுத்துள்ளபடி செய்துவருகின்றன. எந்த உயிரினம் அழிந்தாலும் உயிரினது தொகுப்பில் வெற்றிடம் ஏற்படும். அது ஒட்டுமொத்த உயிரினத்துக்கும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலக பூச்சிகள் தினம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 6 ம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பூச்சிகளை நாம் எவ்வாறு மேலாண்மை செய்யவேண்டும்? அவைகளால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும்.

பயிர்கள், மரங்கள் மற்றும் செடிகளை பூச்சிகளிடம் இருந்து விடுபட கற்றுக்கொடுத்தலையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் பூச்சிகளால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகும்.

World Pest Day 2024 in Tamil


உலக பூச்சிகள் தின வரலாறு

உலக பூச்சிகள் தினத்தை உலக பூச்சிகள் விழிப்புணர்வு தினம் என்றும் அழைக்கப்படுவது வழக்கம். உலக பூச்சிகள் தினம், பெய்ஜிங்கில் 2017ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி அன்றுதான் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. சீன பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கம், பூச்சி கட்டுப்பாடு சந்தை மற்றும் இந்தத் தொழிலில் பணிபுரியும் நிபுணர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாளை முதன்முதலில் அனுசரித்தது.

உலக பூச்சிகள் தினம் கொண்டாடுவதற்கு ஆசிய மற்றும் ஓசியானியா பூச்சி மேலாளர்கள் சங்கம், தேசிய பூச்சி மேலாண்மை சங்கம் மற்றும் ஐரோப்பிய பூச்சி மேலாண்மை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நிதியுதவி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு

பூச்சிகள் மனிதர்களுக்கும் அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால் மனிதர்களின் வாழ்க்கை பூச்சிகளால் நேரடியாக மோசமாக பாதிக்கப்படுகிறது. பூமியில் ஏராளமான வகை பூச்சிகள் உள்ளன. அவைகளில் சில பூச்சி இனங்கள் பயிர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானவையாக இருக்கின்றன. இன்னும் சில பூச்சி இனங்கள் விலங்குகள், உடைகள் மற்றும் கட்டிடங்களுக்கு கூட சேதத்தை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் பயிர்செய்திருக்கும் பல்வேறு பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை அழித்து உணவு உற்பத்தியையே நிலைகுலையச் செய்யும் பல பூச்சிகள் உள்ளன.

World Pest Day 2024 in Tamil

பூச்சிகள் தினத்தின் நோக்கம் என்ன?

உலக பூச்சிகள் தினம் கொண்டாடுவதன் மிக முக்கிய நோக்கம் பூச்சிகளால் ஏற்படும் நன்மைகள் மற்றும் நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இதில் இருந்தே பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன என்பதை அறியலாம்.

ஒரு தனிமனிதன் அல்லது குடும்பம் அல்லது ஒரு ஊர் செழிக்க சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க பூச்சிகள் இல்லாத சூழலை உருவாக்கவேண்டும். இல்லையெனில், பூச்சியினங்களால் அடிக்கடி நோய்த்தாக்கங்கள் ஏற்பட்டு உடல் ஆரோக்ய பிரச்னைகளை கொண்டுவந்து சேர்க்கும்.

World Pest Day 2024 in Tamil

தேவையற்ற செலவுகளால் பொருளாதார சுமைகளும் ஏற்படும். குறிப்பாக டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் மிக வேகமாகப் பரவி வரும் நாடுகளில் உலகப் பூச்சிகள் தினம் குறித்து அறிந்துகொள்வது என்பது இன்றியமையாததாகும்.பூச்சிகளால் ஏற்படும் நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு மற்றும் பல சமூக சேவை நிறுவனங்களுக்கு இந்த நாள் ஒரு சரியான தளத்தை வழங்குகிறது.

உலகம் முழுவதும் சுமார் 17,500-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன. இந்த பட்டாம் பூச்சிகள் சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றித் திரிகின்றன. பூச்சிகளால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறிவதுடன், பூச்சிகளை நிர்வகிப்பது அதன் மூலமாக மனிதர்கள், செடிகள் மற்றும் மரங்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பதன் விழிப்புணர்வை ஏற்படுத்த 2017 ம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி முதல் உலக பூச்சிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் முக்கிய நோக்கம் பூச்சிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!