நம்மை காப்பாற்றிக்கொள்ள பூமியை காப்பாற்றியே ஆகவேண்டும்..!

நம்மை காப்பாற்றிக்கொள்ள பூமியை காப்பாற்றியே ஆகவேண்டும்..!
X

World Environment Day in Tamil-மரம் நடும் குழந்தைகள் (கோப்பு படம்)

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். பூமியைக் காப்பாற்றவேண்டிய அவசர யுகத்தில் நாம் நிற்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

World Environment Day in Tamil, Global Warming,Green,Pollution,Climate Change,Environmental Pollution,Environmental Health,Environmental Problems,Environmental Protection,Environmental Sustainability,Environmental Impact Assessment

அடுத்த தலைமுறை இந்த உயிர்க்கோளத்தில் வாழவேண்டும். நல்ல தூய்மையான காற்று, தூய்மையான சூழல், தூய்மையான நீர் , விஷமற்ற நிலம் இவையெல்லாம் இருந்தால் மட்டுமே எதிர்கால சந்ததி நிம்மதியாக வாழமுடியும்.

World Environment Day in Tamil

நமது எதிர்காலத்தை காப்பாற்றிக்கொள்ள முதற்பணி நாம் பூமியை காப்பாற்றுவதே. அது அவசர பணி. அசந்துவிட்டால் நம்மை அழைத்துச் சென்றுவிடும் இயற்கை. மக்கள்தொகை அதிகரிப்பால் அதற்கேற்ப நாம் பல விரிவாக்கங்களை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் தொழில்மயமாக்கல் விரிவடைகிறது.

வனங்களை அழித்து விவசாய நிலமாக்குகிறோம். அதனால் வனவளம் அழிகிறது. வனவளம் அழிவதால் மழை குறைகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான மனித நடவடிக்கைகளால் மனித சமூகம் பல சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்த, நமது பூமிக்கிரகத்தை பாதுகாக்கவும் அதை வளப்படுத்தவும் மனிதர்கள் ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.


மக்கள் தொகை பெருக்கத்தால் உருவாகும் தொழில்மயமாக்கல் சுற்றுச்சூழல் சவால்களை ஏற்படுத்துகிறது. ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதிசெய்யவேண்டும். இந்த பூமியில் உயிர்வாழும் அத்தனை உயிரினங்களும் காப்பாற்றப்படவேண்டும். தற்போதைய நிலை நம்மை பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுளளது. அந்த கவலை நமக்கு இந்த பூமியைக்காப்பாற்றும் பொறுப்பையும் கடமையையும் உணர்த்துகிறது.

World Environment Day in Tamil

எதிர்கால சந்ததியினருக்காக பூமியை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்பதற்கு சில கட்டாய காரணங்கள் குறித்து கீழே நாம் பார்க்கவுள்ளோம் :

எதிர்கால சந்ததியினருக்காக நாம் ஏன் பூமியை காப்பாற்ற வேண்டும்?

பூமியைக் காப்பாற்றினால் மட்டுமே நமது வாழ்க்கையை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். பூமியை நாம் காப்பாற்றினால் மட்டுமே நாம் காப்பாற்றப்படுவோம்.

அறுந்துபோகும் சூழல்

நமது பூமியானது ஒன்றோடொன்று சார்ந்திருக்கும் ஒரு இணைக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட ஒரு நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பு. ஒரே வளிமண்டல அமைப்பைக்கொண்ட உயிர்க்கோளம். நாம் ஒரு பகுதியில் இந்த பூமிக்கு தீங்கு விளைவித்தால், அது ஒட்டுமொத்த முழு அமைப்பையும் பாதிக்கிறது. அதாவது சுருக்கமாக சொன்னால், இந்தியாவில் உள்ள காடுகளை நாம் அழித்தால் ஜப்பானில் மழையை பாதிக்கலாம் அல்லது அமெரிக்காவில் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்தலாம். நாம் இருப்பது ஒரே குடைக்குள் உள்ள வளிமண்டலத்தில்.

World Environment Day in Tamil


பல்லுயிர்

பூமியானது உயிர்க்கோளம் என்று சொல்லப்படுவதற்குக் காரணமே உயிர்கள் வாழ்வதால்தான். உயிரற்ற ஜடப்பொருட்கள் உட்பட மில்லியன் கணக்கான உயிரினங்களின் தாயகமாக இந்த பூமி திகழ்கிறது. ஒவ்வொரு உயிர் இனமும் சுற்றுச்சூழல் அமைப்பை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகவே இந்த பூமியைக் காப்பாற்றுவதன் மூலம், எண்ணற்ற தாவரங்கள் மற்றும் விலங்குகள், சிறு பிராணிகள், பூச்சியினங்கள் என எண்ணற்ற உயிர்களின் வாழ்வையும் காப்பாற்றுகிறோம்.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் எதிர்கால சந்ததி பார்க்கவும், ரசிக்கவும், அவர்கள் உயிரினங்கள் குறித்து கற்றுக்கொள்ளவும் வழிவகை செய்கிறோம்.


இயற்கை வளங்கள்

பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் நமக்கான வளங்களே. தேவைகேற்ப மட்டுமே பயன்படுத்தி அதன் சமநிலையை காப்பது நமது கடமை. நமக்கு கிடைத்துள்ள வளங்களை அளவோடு பயன்படுத்தினால் மட்டுமே பூமி காப்பாற்றப்படும். நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான காற்று ,உணவு, நீர் மற்றும் தங்குமிடம் போன்ற அனைத்து அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளும் நாம் இந்த பூமியில் இருந்துதான் பெறுகிறோம்.

வனத்தில் ஒரு மரம் காய்கிறது என்றால் இயற்கை அந்த ஒரு மரத்துக்கு பதிலாக 10 மரங்களை உருவாக்கி இருக்கும். அது நாம் அறியாத, நம் கண்களுக்குத் தெரியாத இயற்கையின் சமநிலை படுத்தும்முறை. பூமியால் வழங்கப்படும் இந்த வளங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி எதிர்கால சந்ததிக்கும் விட்டுவைக்கவேண்டும்.

World Environment Day in Tamil


காலநிலை மாற்றம்

நீர் மாசுபட்டுப்போனது, நிலம் மாசுபட்டுப்போனது. காற்று மாசுப்பட்டுப்போனது. இந்த மாசுபாடுகளால் பூமி உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. இந்த மாசுபாடுகளால் காலநிலையில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் எரிபொருட்கள் அதாவது நிலக்கரி பொருட்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் போன்றவை. காடழிப்பு மூலமாக மரங்களை விரைவாக வெட்டி அழித்தல் போன்ற அதிகப்படியான பயன்பாடுகள் காரணமாக காலநிலையில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

மழை பெய்யவேண்டிய காலத்தில் மழை பெய்யாமல் போகும்.காற்றின் திசை மாறி மழையின் போக்கை மாற்றலாம். வறட்சி ஏற்படலாம், சாதாரணமாக் பெய்யவேண்டிய மழை கோரமாக பெய்து வெள்ளக்காடாக மாற்றலாம். இப்படி வழக்கமான கால மாற்றங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு எல்லாம் தலைகீழாக மாறலாம். இது வெப்பநிலை உயர்வதற்கு வழிவகுக்கலாம். மேலும் தீவிரமான வானிலை நிகழ்வுகளை ஏற்படுத்தலாம்.

காற்றின் தரம்

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் புகைக்கழிவுகள் நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. மேலும் வளிமண்டலத்திற்கு மாசு ஏற்படுத்துகிறது. நாம் பூமியைக் காப்பாற்றுவதன் மூலம், தூய்மையான காற்றை சுவாசித்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கமுடியும்.

World Environment Day in Tamil


பூமியை எவ்வாறு பாதுகாக்கலாம்?

தண்ணீர் சேமிப்பு

தண்ணீர் இந்த பூமியின் அமிழ்தம்.தண்ணீர் விலைமதிப்பற்றது. தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்கவேண்டும். குழாய்களை திறந்துவிட்டு குளிப்பதைக்காட்டிலும் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து குளிப்பது தண்ணீர் சிக்கனமாகும். வீட்டு குழாய்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் உடனே அதை சரிசெய்ய வேண்டும். தண்ணீரை சேமிப்பது எதிர்காலத்திற்கான வளத்தை சேமிக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது.

மரங்களை நடுதல்

மரங்கள் பூமியின் நுரையீரல்கள். அவை கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கிக்கொண்டு நாம் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. காலநிலை மாற்றங்களுக்கு மரங்களை அழித்ததும் ஒரு காரணமாகும். ஆகவே, நாம் மரங்களை நடுவதை ஒரு சமூக இயக்கமாக்கி நமது சமூகத்தில் மரம் நடும் முயற்சிகளில் பங்கேற்கவேண்டும்.

World Environment Day in Tamil


ஆற்றல் சேமிப்பு

மின் விளக்குகள், மின் உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களைப் பயன்படுத்தாதபோது அவற்றை அணைத்து வைக்கவும். மின் சிக்கனம் என்பது மின் உற்பத்திக்கு நிகரானது. மின் நுகர்வை குறைப்பதற்கு குறைந்த ஆற்றல் திறன் கொண்ட மின் ஒளி விளக்குகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தவேண்டும்.

பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு

தனியாக வாகனங்கள் பயன்படுத்துவதற்குப் பதிலாக பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு கார்பன் வெளியீட்டைக்குறைக்கும். மிதிவண்டி போன்ற போக்குவரத்து பயன்பாடு சூழலுக்கும் மணித் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும். இவ்வாறான நடவடிக்கைகள் காற்று மாசுபாட்டை குறைப்பதுடன் கார்பன் வெளியீட்டையும் குறைக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். இந்த சுத்தமான எரிசக்தி ஆதாரங்கள் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகின்றன.

World Environment Day in Tamil


குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி

பயன்பாட்டைக் குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல்

இந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்வது மதிப்புமிக்கது. மறுசுழற்சியானது நிலப்பரப்பில் உள்ள கழிவுகளை குறைக்க உதவுகிறது. மேலும் மதிப்புமிக்க வளங்களை பாதுகாக்க உதவுகிறது.

விழிப்புணர்வு கல்வி

சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் மற்றும் நாம் பெற்ற அறிவை எல்லோருக்கும் பகிர வேண்டும். அதேபோல பூமியை காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எளிதாக சென்றுசேர வழிவகை செய்யவேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு மிக மிக அவசியம்.

இளைய மாணவர்களிடம் சூழல் குறித்த கல்வி எளிதாக சென்று சேர்வதையும் உறுதி செய்யவேண்டும்


பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல்

பிளாஸ்டிக் இந்த பூமிக்கு ஒரு கோர அரக்கன். அதன் மாசுபாடு நமது பெருங்கடல்களுக்கும் வனவிலங்குகளுக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுபயன்பாட்டுப் பைகள், பாட்டில்கள் மற்றும் கொள்கலன்களை பயன்படுத்தவேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் இல்லாத கொள்கலன்களை பயன்படுத்தவேண்டும்.

World Environment Day in Tamil

பாதுகாப்புக்கான உதவிகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன. சில தனி நபர்களின் முயற்சிகூட நடக்கிறது. நம்மால் முடிந்த நன்கொடைகள் அல்லது தன்னார்வப் பணி மூலம் இந்த அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நிலையான உணவுப் பழக்கங்கள்

இறைச்சி உட்கொள்வதைக் குறைத்து, நிலையான உணவு வகைகளைத் தேர்வு செய்யுங்கள். இது வளங்களை பாதுகாக்க உதவுகிறது. மேலும் உணவு உற்பத்தியுடன் தொடர்புடைய கார்பன் தடத்தை குறைக்க உதவுகிறது.


தனிப்பட்ட ஒவ்வொருவரின் முயற்சியே ஒட்டுமொத்த வெற்றியாகிறது

நான் ஒரு ஆள் மாறுவதாலா இந்த பூமி மாறிடப்போகுது என்று உங்கள் செயல்பாடுகளை குறித்து மதிப்பிட்டுவிடாதீர்கள். ஒரு தனி நபரின் செயல்பாடும் ஒவ்வொரு தனி நபரின் செயல்பாடாக மாறுகிறது. ஒவ்வொரு தனி மனிதரின் செயல்பாடும் சமூக செயற்பாடுகளாக மாறுகிறது. அதுவே மாற்றத்திற்கான வழி.

World Environment Day in Tamil

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கால சந்ததியினருக்காக பூமியைக் காப்பாற்ற உறுதிபூண்டிருந்தால், தினமும் ஒரு சிறிய சுற்றுச்சூழல் உணர்வுள்ள செயல்களை மேற்கொள்வதை எண்ணிப்பாருங்கள். அந்த கற்பனைக்கு ஒரு நிஜ வடிவம் கொடுங்கள். கூட்டு முயற்சியே மகத்தானதொரு வெற்றியாக அமையும்.

கழிவுகளைக் குறைப்பதன் மூலமும், வளங்களைப் பாதுகாப்பதன் மூலமும், ஆரோக்கியமான பூமியை உறுதிப்படுத்த முடியும். அதன் மூலமாகவே பூமியானது தலைமுறை தலைமுறையாக செழிப்பான மற்றும் துடிப்பான இடமாக இருப்பதை நாம் உறுதிசெய்ய முடியும். நினைவில் கொள்ளுங்கள், நமது பூமி ஒரு இடம் மட்டுமல்ல; பாதுகாத்து வைக்கவேண்டிய கூடு.

நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இந்த பூமியைக் காப்பாற்றியாகவேண்டும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!