செவ்வாய் செல்லுமா அமெரிக்கா...?

செவ்வாய் செல்லுமா அமெரிக்கா...?
X

எலன் மாஸ்க்.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு விண்கலன்களை அனுப்பும் முயற்சியில் எலன் மாஸ்க் பெரும் சரிவினை சந்தித்துள்ளார்.

இந்தியாவின் விண்வெளி நிறுவனம் இஸ்ரோவின் வர்த்தக போட்டியாளராகலாம் என கருதப்படும் அமெரிக்காவின் எலன் மஸ்க் என்பவரின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட், ஏவிய சில வினாடிகளில் வெடித்திருக்கின்றது. இது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருகின்றது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் வெடித்து சிதறுவது முதல்முறை இல்லை என்றாலும் இது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது. 200 மீட்டர் உயரத்துக்கு மேல் கொண்ட அந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தினை தொடர்பு கொள்ள அனுப்பப்பட்டது.

சர்வதேச விண்வெளி திட்டத்தில் அமெரிக்காவின் நாசா எந்த ராக்கெட்டையும் பெரிதாக செலுத்தவில்லை. அங்கு செல்ல ரஷ்யாவின் சோயுஸ் மட்டுமே இப்போது உண்டு. ஒரு வகையில் ரஷ்ய ராக்கெட்டுக்கள் பாதுகாப்பானவை. விபத்து அதிகமில்லா சாதனையினை கொண்டிருப்பவை. எலன் மஸ்க் ரஷ்ய விண்வெளி ஆதிக்கத்தை தகர்க்க உருவாக்கப்பட்டவர் என்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. இப்போது மறுபடியும் எலன்மாஸ்க் சறுக்கியிருக்கின்றார். இனி விண்வெளி தேவைக்கு ரஷ்யாவினைத்தான் உலகம் நம்ப வேண்டும். என்ன தான் உக்ரைன் தொடர்பாக ரஷ்யா மேல் பகை கொண்டு அமெரிக்கா பல நடவடிக்கை என்றாலும் இன்றும் விண்வெளி அமைப்பில் ரஷ்யாவினை விலக்கி வைக்க யாருக்கும் வழியில்லை.

இந்தியாவின் ராக்கெட்டுகள் மிகவும் நம்பகமானவை என்றாலும் சர்வதேச நிலையத்துடன் இணையும் அளவு இந்தியா அந்த பக்கம் தன் ஆய்வை திருப்பவில்லை. தற்போது வரை இந்தியா வர்த்தக ரீதியான செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதோடு நிற்கின்றது, விரைவில் இந்தியா விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிறுவனம் பக்கம் செல்லலாம். அதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. 2030ல் செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்து செல்வேன் என சொல்லி கொண்டிருப்பவர் எலன் மஸ்க். அவரின் இந்த சிறிய முயற்சியே சொதப்பிய நிலையில், அடிக்கடி அவரது ராக்கெட் வெடிக்கும் நிலையில் இனி செவ்வாய் செல்வது கேள்விக்குறி தான்...

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!