டாலருக்கு மாற்று நோட்டு அவசியப்படுவது எதனால்?
பிரிக்ஸ் நாடுகள் வெளியிட உள்ள கரன்சியின் மாதிரி.
ஏன் டாலருக்கு மாற்றாக ஒரு நாணய மதிப்பு வேண்டும் என்பதை இந்த செய்தியில் அறிந்துகொள்ளலாம் வாங்க.
உதாரணத்திற்கு சென்னை மாநகராட்சி உலக வங்கியுடன் ஒப்பந்தம் போட்டு, ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது எனில், அதற்காக உலக வங்கி வழங்கும் பணம் டாலரில் தான் இருக்கும். நாம் இதை வாங்கி, இந்திய பணமாக மாற்றி பின்னர் பயன்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு நாடும், சர்வதேச அளவில் பொருளாதார தொடர்பு கொள்ளும் போது டாலர் தான் முன்வந்து நிற்கிறது.
இதன் காரணமாக உலக நாடுகளில் 60% நாடுகள் டாலரை இருப்பு வைத்திருக்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வரும் போது இருப்பு வைத்திருக்கும் டாலரை கொண்டு அதை சரி செய்துக்கொள்கின்றன. மறுபுறம், கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றை வாங்கவும் விற்கவும் டாலர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே உலக நாடுகள் மத்தியில் டாலருக்கு என்றும் மவுசு குறையாமல் இருக்கிறது. இது பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் வளர்ச்சி, நமது ரூபாயை மதிப்பற்றதாக மாற்றி விடுகிறது. இதே பிரச்னை சீனா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கும் இருக்கிறது. எனவே, இதனை சரி செய்ய, டாலருக்கு எதிராக புதிய ரூபாய் நோட்டுக்களை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் முயன்றுள்ளன. குறிப்பாக ரஷ்யா இதற்காக தீவிரமாக முயன்று வருகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டணிக்கு என பொதுவான ரூபாய் நோட்டை உருவாக்க யோசித்து வருகிறது. இந்த ரூபாய் நோட்டில் 5 நாடுகளின் கொடியும் இடம் பெற்றிருக்கும். இதை கொண்டு இந்த 5 நாடுகளுக்குள் பண பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இது டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும என்றும் ரஷ்யா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இது சாத்தியமாகும்பட்சத்தில், பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும் என கருதப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu