ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனை ஆதரித்து களத்தில் இறங்காதது ஏன்?
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் சூழலில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கின்றனவே தவிர அவர்களுக்கு ஆயுத உதவியோ அல்லது நேரடியாக உக்ரைனுக்கு ஆதரவாகவோ களத்தில் இறங்கவில்லை. அதற்கு காரணம் என்ன?
நேட்டோ உறுப்பு நாடுகளான பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் இயற்கை எரிவாயுவில் 40 சதவீத தேவையை ரஷ்யாவிடமிருந்துதான் பெறுகின்றன. எரிவாயுக்கு ரஷ்யாவை நம்பி இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். உண்மையில், ஐரோப்பிய நாடுகள் எரிவாயு சக்திக்காக ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ளன.
ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, பின்லாந்து, லிதுவேனியா, கிரீஸ், ருமேனியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளுக்கு தினமும் 2.5 மில்லியன் பேரல்கள் கப்பல் மூலமாக ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை வைத்தே, எந்த அளவுக்கு ரஷ்யாவை நம்பி இந்த நாடுகள் உள்ளன என்பது தெளிவாகும்.
ரஷ்யா எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தினால், ஐரோப்பா ஒரு பெரிய ஆற்றல் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும். மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மீதான பணவீக்கம் அவர்களின் முதுகெலும்பை உடைக்கலாம். இந்த அடிப்படை விஷயம் எல்லா நாடுகளுக்கும் தெரியும். எனவேதான், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை நேரடியாக தாக்க தயங்குகின்றன.ரஷ்யா மீதான நேரடித் தாக்குதலில் இருந்து ஐரோப்பிய நாடுகள் பின்வாங்குவதற்கான உண்மைக்காரணமும் இதுதான்.
எல்லா இடங்களிலும் உள்குத்துண்ணு ஒண்ணு இல்லாமல் இல்லை. 'இதெல்லாம் அரசியலில் சகஜமுங்க..' இந்த வார்த்தை எவ்வளவு உண்மையானது பாருங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu