நேட்டோ படையைத் தாக்கினால் 3ம் உலகப் போர் நிச்சயம்: ரஷ்யா- அமெரிக்கா தயங்குவதன் காரணம் இதுதான்
![நேட்டோ படையைத் தாக்கினால் 3ம் உலகப் போர் நிச்சயம்: ரஷ்யா- அமெரிக்கா தயங்குவதன் காரணம் இதுதான் நேட்டோ படையைத் தாக்கினால் 3ம் உலகப் போர் நிச்சயம்: ரஷ்யா- அமெரிக்கா தயங்குவதன் காரணம் இதுதான்](https://www.nativenews.in/h-upload/2022/02/24/1484989-1.webp)
ரஷ்யா- உக்ரைன் ஆகிய நாடுகள் சோவியத் யூனியனுக்குக் கீழ் ஒன்றாகவே இருந்தது, ஆனால் 1991ஆம் ஆண்டு டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாகப் பிரிந்தது. உக்ரைன் பிரதமர்களைக் கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் ஆட்சி மாற்றம், மேற்கத்திய நாடுகளின் தலையீடு ஆகியவற்றின் மூலம் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதன் பின்பு தான் 2014ல் உக்ரைன் நாட்டிற்குச் சொந்தமான கிரிமியா-வை ரஷ்யா கைப்பற்றியது. ரஷ்யா அதைத் தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது.
தற்போது உக்ரைன் நாட்டை ஆயுத போர் மூலம் கைப்பற்ற வேண்டும் என்பது ரஷ்யாவின் முக்கிய இலக்காக கொண்டு உள்ளது, உக்ரைனை கைப்பற்றுவது மூலம் ரஷ்யாவின் எல்லை, வர்த்தகம், ஆதிக்கம் என அனைத்தும் விரிவாக்கம் அடையும். இதேவேளையில் உக்ரைன் நாட்டில் பல பகுதிகளில் இந்நாட்டின் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர். இதை முக்கிய வாய்ப்பாக ரஷ்யா பார்க்கிறது. சர்வதேச சந்தையில் ரஷ்யா ஏற்கனவே ஆதிக்கம் செய்து வரும் நிலையில் ரஷ்யாவின் உக்ரைன் கைப்பற்றும் திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காக மேற்கத்திய நாடுகள் ஒன்று கூடியுள்ளது.
உண்மையில் உக்ரைன் NATO அமைப்பின் உறுப்பினர் அல்ல, ஜூன் 2020ல் NATO அமைப்பின் Interoperability programல் உக்ரைன் சேர்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பல முறை NATO-வின் உறுப்பினராகச் சேர்க்க வலியுறுத்தியும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு ஒதுக்கி வைத்து வந்தது.
NATO-வின் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளுக்கும், NATO நாடுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம். ஆனால் உக்ரைன் NATO-வின் நிரந்தர உறுப்பினராக இல்லாத நிலையில் NATO படைகள் உக்ரைன் எல்லையில் உள்ளது. இது ரஷ்யாவிற்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா NATO படைகளைத் தொட்டால் அது கட்டாயம் அமெரிக்காவுடன் நேரடியாகப் போர் தொடுப்பதாகும். இதனாலேயே ரஷ்யா கிழக்கு உக்ரைன் பகுதிகள் வாயிலாக நுழைக்கிறது. மேற்கு பகுதியில் இருக்கும் உக்ரைன் - NATO படையைத் தாக்கினால் கட்டாயம் 3 உலகப் போர் நிச்சயம்.
உக்ரைன்-க்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா என NATO படையில் இருக்கும் அனைத்து நாடுகளும் உறுதுணையாக உள்ளது. இதேபோல் ரஷ்யாவுக்குச் சீனா, ஈரான், வட கொரியா மற்றும் சோவியத் யூனியனில் ஆர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுதுணையாக உள்ளது.
அனைத்தையும் தாண்டி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் 8000 அணு ஆயுதங்கள் உள்ளது. இதைத் தாண்டி ரஷ்யாவிடம் உலகமே பயப்படும் TSAR bomb உள்ளது, மேலும் இன்று புடின் பேசுகையில், ரஷ்யாவின் செயலுக்கு எந்த நாடு தடையாக இருந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்த்திராத பின்விளைவுகளை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளார். இதனால் அமெரிக்காவும் சரி, ரஷ்யாவும் சரி ஒன்றை ஒன்று நேரடியாகத் தொடத் தயக்கம் காட்டி வருகின்றன. 2வது உலகப் போருக்கு இணையாக வர்த்தகம், பொருளாதாரப் பாதிப்பை கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியா உட்பட உலகில் அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு உள்ள நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் மூலம் 3வது உலகப் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
3வது உலகப் போர் வெடித்தால் தற்போது இருக்கும் பணவீக்கம், நாணய மதிப்பின் ஆதிக்கம் மூலம் ஏழை நாடுகளுக்கு இணையாக வல்லரசு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்தச் சரிவில் இருந்து மீண்டு வர பல வருடங்கள் ஆகும். மேலும் 3வது உலகப் போர் மூலம் உண்மையில் யார் வல்லரசு நாடு என்பதும் தெரிந்துவிடும்.
இந்தியா ஏற்கனவே பாகிஸ்தான், சீனா-வை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் 3வது உலகப் போர் வெடித்தால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை தடுமாறி வரும் நிலையில் 3வது உலகப் போர் என்பது இந்தியாவுக்குப் பெரும் பிரச்சனை. மேலும் இந்தியா - ரஷ்யா நட்புறவு பல ஆண்டுகளாகச் சிறப்பாக உள்ளது, சீன எல்லை பிரச்சனை தவிர அனைத்துப் பாதுகாப்பு சார்ந்த விஷயத்திலும் இந்தியாவிற்கு ரஷ்யா துணை நின்றுள்ளது. குறிப்பாக ஆயுத கொள்முதலில் இந்தியா- ரஷ்யாவுக்கு மத்தியில் நீண்ட காலப் பந்தம் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu