டிவி விவாதத்தில் சண்டை நடந்தது என்ன?

டிவி விவாதத்தில் சண்டை  நடந்தது என்ன?
X

பைல் படம்

தொலைக்காட்சி விவாதத்தின் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷேர் அப்சல் மார்வத் மற்றும் அங்கு இப்போது ஆளும் கட்சியாக உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியைச் சேர்ந்த அஃப்னானுல்லா கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது இம்ரான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்சல் மார்வத் திடீரென எழுந்து அஃப்னானுல்லா கானை ஓங்கி ஒரு அறை அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்னானுல்லா கானும் தாக்குதலில் இறங்கினார், இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். நிகழ்ச்சி நெறியாளர் அவர்களை அமைதிப்படுத்த முயன்ற போதும் ஒன்றும் நடக்கவில்லை. இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இம்ரான்கானை சிறையில் அடைத்து, அவர் தேர்தலில் நிற்க தடை விதித்ததால், அந்நாட்டு அரசு மேல் இம்ரான்கான் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி நலிவடைந்து திவாலாகி வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிருப்தியும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் பாக்கிஸ்தானில் தேர்தல் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் தான் டிவி விவாதத்தில் ஆளும் கட்சியினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!