வீட்டோ பவருடன் ஐ.நா சபையில் இந்தியா..!
உலகின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்துக்கு முன்னேறி விட்டது. மோடியின் மகத்தான சாதனை இது. 10 ஆண்டுக்கு முன் இந்தியா 12ம் இடத்தில் தத்தளித்தது. மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் அது மூன்றாம் இடத்துக்கு முன்னேறி விட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஜெர்மன் , பிரிட்டன் எனும் அந்த நீண்ட வரிசையில் இந்தியாவுக்கு இப்போது மூன்றாம் இடம் கிடைத்து விட்டது. ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து வலுவான நாடு எனும் மாபெரும் நிலையில் தேசம் நிற்கின்றது.
ஒரு நாட்டின் அமைதி, தொழில்வளம், ராணுவபலம், நிதிநிலை, ஏற்றுமதி என எல்லாம் கணித்து வெளியிடப்படும் இந்த ஆய்வில் பாரதம் மூன்றாம் இடம் பெற்று விட்டது. இது இனி ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா வீட்டோ அதிகாரத்தோடு விரைவில் அமரும் என்பதை சொல்கின்றது, நேற்று ஐநா பொது செயலாளரும் அதை அறிவித்தார்.
மோடியின் நவராத்திரி விரதம் முதல் நாட்டுக்காக அவர் செய்யும் ஒவ்வொரு தவமும் கைகொடுத்தது என்பதை பிரபஞ்சம் சொல்லும் நேரமிது.
UNSC இந்தியாவுக்கான நிரந்தர இருக்கை- அமெரிக்கா ஆதரவு
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் விருப்பத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் தலைவர்கள் தங்கள் கூட்டறிக்கையில் ஐநா அமைப்பின் விரிவான சீர்திருத்தத்தின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினர். உச்சிமாநாட்டின் ஓரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையே நடந்த இருதரப்பு விவாதங்களைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பல ஆண்டுகளாக இந்தியா நிரந்தர இடத்தைப் பெற முயன்று வருகிறது. அமைதி காக்கும் பணிகளில் அதன் பங்களிப்புகள், விரிவடைந்து வரும் உலகளாவிய செல்வாக்கு மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அதன் அந்தஸ்தை எடுத்துக்காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில், குறிப்பாக பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான சீர்திருத்தங்களுக்கு இந்தியா விரும்புகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu