கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசி : அதிபர் ஜோ பிடென் அறிவிக்க உள்ளார்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசி : அதிபர் ஜோ பிடென் அறிவிக்க உள்ளார்
X

அமெரிக்க அதிபர் ஜோ பிடென்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அதிபர் பிடென் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்:

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அமெரிக்கர்களுக்கு அதிபர் பிடென் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிடவுள்ளதாக வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் புதிய உருபெற்றுள்ள ஒமிக்ரான் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போடுவதன் அவசியத்தை அமெரிக்க மக்களுக்கு தனது உரை மூலமாக வலியுறுத்த அதிபர் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.

கோவிட்-19 உடன் இரண்டாவது முறையாக நீண்ட விடுமுறை காலத்திற்கான வாய்ப்பை உலகம் எதிர்கொண்டு வருகிறது. ஏனெனில், குடும்பங்களும் நண்பர்களும் கூடிவரத் தொடங்கிவிட்டனர். இதனால் ஒமிக்ரான் விரைவாக பரவி தீவிரமான நோயை ஏற்படுத்துகிறதா என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் புலப்படாமலேயே உள்ளது. ஆனால், தடுப்பூசி மட்டுமே கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்கும் என்பதை அவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் ஜென் சாகி, செய்தியாளர் சந்திப்பில், அதிபர் எவ்விதமான லாக் டவுன் அறிவிப்புக்கும் திட்டமிடவில்லை என்றும் அதற்கு பதிலாக தடுப்பூசி போடுவதற்கு மக்களை ஊக்குவிப்பார் என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள ஊக்குவிப்பார் என்றும் கூறினார்.

அதிபர் பிடெனின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் டாக்டர். அந்தோனி ஃபௌசி கூறும்போது, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அமெரிக்கர்களுக்கு குளிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து பிடென் ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிடுவார் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்தே அமெரிக்கர்களுக்கு அதிபர் ஒரு அறிக்கையை வெளியிட தயாராக இருப்பதாக தெரிய வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!