ஒமிக்ரான் எதிரொலி: அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்
மற்ற வகைகளை விட ஓமிக்ரான் லேசானது என்று ஆரம்பகால கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும் , விஞ்ஞானிகள் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளால் கவலையடைந்துள்ளனர்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட விமானங்களில் கால் பகுதி அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால், பரவலைத் தடுக்க அவர்களை சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் காரணமாக இந்த பிரச்சினை எழுந்தது.
உலகெங்கிலும் உள்ள நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் தொற்றுகள் வேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில், ஒன்றாக கூடுவதால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. .
ஐரோப்பா முழுவதும், பல்வேறு நாடுகள் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன:
- இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் மீண்டும் முககவசங்களை கட்டாயமாக்கியுள்ளன
- வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியாவில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- இந்த வார தொடக்கத்தில் நெதர்லாந்து கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியது
- டிசம்பர் 28 முதல் இரவு விடுதிகளை மூடுவதாகவும் ஜெர்மனி கூறியுள்ளது. கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
- போர்ச்சுகல் பார்கள் மற்றும் இரவு விடுதிகளை டிசம்பர் 26 முதல் மூட உத்தரவிட்டுள்ளது, மேலும் ஜனவரி 9 வரை வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, ஈஸ்வதினி, மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நவம்பர் 29 முதல் தடை செய்யப்பட்டுள்ளனர் .
அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோனி ஃபாசி, இந்த வார தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பயணம் செய்பவர்களிடையே, முழு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.
இருப்பினும், நாடு முழுவதும் உள்ள விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பயண திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.
வெள்ளி பிற்பகல் 03:30 மணி அளவில், அமெரிக்காவிற்குள் வரும் அல்லது வெளியே செல்லும் 689 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கிறிஸ்துமஸ் தினத்தன்று 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா, யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, உலகளாவிய விமான நிறுவனங்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் புறப்பட திட்டமிடப்பட்ட 4,000 விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஆஸ்திரேலியாவில், வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பண்டிகை பயணங்கள் பாதிக்கப்பட்டன, சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து பிற நகரங்களுக்கு 100க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu