இந்தியாவிற்கு மீண்டும் தொல்லை தரும் சீனாவின் புதிய நடவடிக்கை?
பைல் படம்
சீனர்கள் மீண்டும் தொல்லையை ஆரம்பித்திருக்கிறார்கள். சீனாவுக்குச் செல்ல விரும்பும் அருணாச்சல் பிரதேச மாநிலத்தவர்களுக்கு விசாவை அவர்களின் இந்திய பாஸ்போர்ட்டில் அடிக்காமல், தனியானதொரு காகிதத்தில் அச்சடித்து ஸ்டேப்பில் செய்து கொடுக்கிறார்கள். நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னால் இதைத்தான் செய்தார்கள்.
பதிலடியாக மோடி டிக்-டாக் போன்ற சீனாவின் ஆப்களை இந்தியாவை விட்டு விரட்டியடித்தார். டிக்-டாக் மட்டுமல்ல, பல நூற்றுக்கணக்கான சீன ஆப்களை இந்தியா தடைசெய்து உலகிற்கே அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்று வரையில் ஆனானப்பட்ட அமெரிக்காவினால் கூட சீன ஆப்களைத் தடைசெய்ய இயலவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இதன் காரணமாக சீனர்கள் பல பில்லியன் டாலர் வருமானத்தை இழந்தார்கள். தடையை நீக்கச் சொல்லிப் பலமுறை கெஞ்சியும் மோடி சீனர்களை மதிக்கவில்லை.
இது 1960களில் இருந்த இந்தியா இல்லை என்கிற விவரத்தை அன்றைக்குத் தான் சீனர்கள் முழுமையாக உணர்ந்தார்கள். மோடி அத்துடன் நிற்கவில்லை. முக்கியமான தொழில்களில் சீனர்களின் முதலீடுகளை உள்ளே வரவிடாமல் விரட்டியடித்து விட்டார். சென்ற வாரம் கார்களுக்கான பேட்டரி தயாரிக்க ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமிட்டு ஏறக்குறைய ஒரு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முனைந்தார்கள் சீனர்கள். மோடி அதனைத் தடுத்து அவர்களை விரட்டியடித்து விட்டார். சீனர்கள் மன்றாடினார்கள், கெஞ்சினார்கள். மோடி மசியவில்லை.
நாளுக்கு நாள் சீனப் பொருளாதாரம் நசிந்துகொண்டே வருகிறது. அங்கு முதலீடு செய்திருந்த வெளிநாட்டு நிறுவனங்களில் பெரும்பாலானவை கடையைச் சார்த்தி விட்டன அல்லது சார்த்தும் நிலையில் இருக்கின்றன. டெஸ்லாவின் மிகப் பெரிய கார் தொழிற்சாலையை அங்கிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வரும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே சாம்சங் போன்ற நிறுவனங்கள், ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி விட்டன.
சீனாவில் இன்றைக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கிறது. ஷாங்காய் போன்ற நகரங்களில் இருந்த பெரிய மால்கள் ஆட்களே இல்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக் கின்றன. தீர்க்கவே இயலாத கடனில் சீன நிறுவனங்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன அல்லது மூழ்கி விட்டன. ரியல் எஸ்டேட் தொழில் மொத்தமாக நஷ்மடைந்து விட்டது. கட்டிய வீடுகளை வாங்க ஆளில்லை, வீட்டை வாங்கியனிடம் மாதாந்திரத் தவணை செலுத்தக் காசில்லை என சீனர்களின் துயரம் ஏராளம்.
மிக நன்றாகச் சென்றுகொண்டிருந்த சீனப் பொருளாதாரத்தைக் கடனில் மூழ்கடித்துப் புண்ணியத்தை கட்டிக் கொண்டவர் ஜின்பிங் என்கிற மகான். அவர் ஆரம்பித்த அத்தனை திட்டங்களும் படுதோல்வியில் முடிந்திருக்கின்றன. சீபெக் போன்ற நடைமுறைக்கு ஒத்துவராத திட்டங்களும், ஏழை நாடுகளை அடிமைப்படுத்த அவர்களுக்குக் கடன் கொடுத்ததும், எந்தவிதமான முன்யோசனையுமின்றி கட்டி முடிக்கப்பட்ட புதிய நகரங்களும் சீனாவை மிகப்பெரும் சிக்கலில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்தியா தங்களுக்கு எதிராக வளர்ந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் சீனா மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மோடி பதவியேற்றவுடன் தூக்கியெறியப்பட்டு விட்டது. அதற்குப் பின்னர் சீனர்கள் இந்தியாவை மிரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள். கல்வான், டோக்லாம் போன்ற பகுதிகளில் நுழைந்து இந்திய ராணுவத்திடம் உதைவாங்கி மூக்குடைபட்டுத் திரும்பி ஓடினார்கள்.
இப்படியாக இந்தியா சீனாவின் போலி முகத்திரையைக் கிழித்துத் தோரணம் கட்டி விட்டது. அவமானம் தாங்க முடியாத சீனர்கள் இன்றைக்கும் பொருமிக் கொண்டிருக்கிறார்கள். மணிப்பூரில் கலவரத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை சேர்ந்த சிலருக்கு சீனர்களின் பணம் பாய்கிறது. இலங்கை மூலமாக இந்தியாவிற்குத் தொல்லை தருவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. இதன் காரணமாக முற்றிலுமாக இந்தியாவின் நம்பிக்கையை சீனா இழந்து விட்டது. சென்ற வாரம் அஜித் டோவலுடன் நடந்த பேச்சுவார்த்தை களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. இனி இந்தியர்களுடன் நேரடியாக மோதுவது முடியாத காரணம் என்பதால் சீனர்கள் மறைமுகமாகத் தொல்லை தர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதற்கிடைய சீன வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின்-காங் (Qin Gang) காணாமல் போயிருக்கிறார். அவர் எங்கிருக்கிறார், என்னவானார் என்பது எவருக்குமே தெரியவில்லை. சீனா போன்றதொரு பெரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் திடீரென காணாமல் போவது சாதாரண விஷயமில்லை. சீனா இதுகுறித்து வாயே திறக்கவில்லை. கின்-காங்கிற்கு பதிலாக இதற்கு முன்னால் அமைச்சராக இருந்த வாங்-யி (Wang Yi) மீண்டும் அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்.
மேற்படி கின்-காங் (Qin Gang) சாதாரணமானவரில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பெரிய பதவி வகுத்தவர். ஜின்பிங்கின் வலது கரம் போன்றவர். அப்படியானவர் திடீரென மறைந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன என்றாலும் அவர் மூலமாக சீன ராணுவ ரகசியங்கள் கசிந்ததாகக் கருதப்படுவது மிக முக்கியமானது. வெளியுறவுத்துறை அமைச்சராவதற்கு முன்னால் கின்-காங் அமெரிக்காவில் சீனாவிற்கான தூதராக பணிபுரிந்தார். ஆள் கொஞ்சம் பெண் பித்தர். அவரைப் பேட்டியெடுப்பதற்காக ஹாங்காங் டி.வி.யைச் சேர்ந்த ஒரு அழகுப் பெண் வந்து சேர்ந்தார். வினையே அவருக்கு அங்கிருந்துதான் ஆரம்பமானது. கின்-காங் அந்தப் பெண்ணுடன் ரகசியத் தொடர்பு கொண்டார். அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருப்பதாக வும் பேச்சிருக்கிறது.
அடிப்படையில் அந்தப் பெண் ஒரு அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் உளவாளி.கின்-காங்கின் வீக்னெஸைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கர்கள், அவர் அந்தப் பெண்ணுடன் இருக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுத்து வைத்துக் கொண்டார்கள். அதனைக் கொண்டு அவரை மிரட்டிச் சீனாவின் அத்தனை ராணுவ ரகசியங்களையும் தெரிந்து கொண்டார்கள்.
அமெரிக்காவை மிரட்டிக் கொண்டிருந்த சீனர்களை அடக்க இந்த நல்ல வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்ட அமெரிக்க ஃபாரின் செகரட்டரி ப்ளிங்க்கன் உடனடியாக சீனாவுக்குப் பயணமானர். அங்கு அவர் கொண்டு வந்த தகவல்களைக் கண்டு சீனர்கள் அரண்டு போனார்கள். அத்தனயும் மிக, மிக ரகசியமான ராணுவத் தகவல்கள். வேறு வழியில்லாமல் சீன அதிபரான ஜின்பிங் தனக்குச் சமமான அந்தஸ்தில்லாத ப்ளிங்க்கனை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டானது.
சீனர்கள் எதிராளியின் முன்னால் அவமானப்படுவதனை மிகக் கேவலமான விஷயமாக நினைப்பவர்கள். எனவே இத்தனைக்கும் காரணமான கின்-காங்கை உடனடியாக சீனாவுக்கு வரவழைத்து அவரைக் காணாமல் போகச் செய்து விட்டார்கள்.
இந்தமாதிரியான விஷயங்கள் சர்வாதிகார கம்யூனிச நாடான சீனாவில் மட்டுமே நடக்கும். இந்தியா போன்ற நாடுகளில் அதிகபட்சம் பதவியை விட்டு விலக்குவார்கள் அல்லது ஜெயிலில் தூக்கிப் போடுவார்கள். சீனக் கம்யூனிசம் கொடூரமானது. சீன முன்னாள் வெளியுறவு அமைச்சரின் ஆன்மா சாந்தியடைவதாக!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu