/* */

காசாவில் முப்படைத்தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் முப்படையினர் தாக்குதலை இஸ்ரேல் தயார் தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

காசாவில் முப்படைத்தாக்குதல்  தொடங்கியது இஸ்ரேல்
X

பைல் பபடம்

தரைப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான பீரங்கிகளுடன் 10 ஆயிரம் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனத்தின் வடக்கு காசாபகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் மேலும் ஒரு ஹமாஸ் கமாண்டர் உயிரிழந்தார்.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 2,300 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 10வது நாளாக போர் நீடித்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரின் நுக்பா படையின் தெற்கு பகுதி கமாண்டர் பிலால் அல் குவாத்ரா, காசாவின் தெற்கு பகுதியான கான் யூனிஸ் பகுதியில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் பிலால் அல் குவாத்ரா உட்பட ஏராளமான ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிலால் அல் குவாத்ரா மூளையாக செயல்பட்டுள்ளார். இஸ்ரேலின் 2 நகரங்கள் மீதான தாக்குதல் அவரது தலைமையின் கீழ் நடந்துள்ளது. தற்போது எங்கள் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். அவர் உட்பட இதுவரை 3 ஹமாஸ் கமாண்டர்கள் உயிரிழந்துள்ளனர்’’ என்று தெரிவித்தன.

காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக தாக்குதல் தொடங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக மக்களுக்கு முதலில் 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் 6 மணி நேரம் அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

வழிகளை மூடிய தீவிரவாதிகள்: ஆனால், மக்கள் செல்லும் வழிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மூடிவிட்டதால், லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசா பகுதியில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் டெல் அவிவ் நகரில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நெதன்யாகு பேசும் போது, ‘‘இஸ்ரேல் மக்களை அழித்துவிடலாம் என்று ஹமாஸ் கனவு காண்கிறது. அதற்கு முன்பாக, ஹமாஸ் அமைப்பை நாம் முழுமையாக அழித்து விடுவோம். இஸ்ரேலின் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஓரணியாக செயல்பட வேண்டும்’’ என்றார். வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறும் போது, ‘‘ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து அழிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும்’’ என்றார்.

பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்காக காசா முனை எல்லை பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 10,000 வீரர்கள் ஏற்கெனவே காசா எல்லை பகுதிக்குள் நுழைந்து விட்டனர். ராணுவ தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்ததால் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம், விமானப் படை, கடற்படை தயார் இணைந்து வடக்கு காசாபகுதியில் ஒரே நேரத்தில் தாக்குதல் தொடங்கி உள்ளன.

இஸ்ரேல் மக்கள் வெளியேற்றம்: காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும்போது, ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை குண்டு தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடும் என்றுதெரிகிறது. இதனால், காசாவை ஒட்டிய இஸ்ரேலின் தெற்கு பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்தும் ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால், இஸ்ரேல் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Oct 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...