விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள்..!

விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள்..!
X

விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைகோள்கள் (கோப்பு படம்)

விண்ணில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள்.. டாப் லெவலில் இருக்கும் 8 நாடுகள் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு விண்வெளியில் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்துவருகின்றனர்.

விண்வெளியின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், சில ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு மீண்டும பூமிக்கு வந்துவிடும்.

சில திட்டங்கள் தோல்வியில் முடியும், இவ்வாறு எத்தனை தோல்விகள் வந்தாலும், விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி வைத்து தங்களது நாட்டின் வெற்றிக்கொடியை பறக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 வெற்றியை, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் தங்களது வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு விண்ணிற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு செயற்கைக்கோள்களும் தகவல் தொடர்பு, வானிலை கண்காணிப்பு, அறிவியல் ஆய்வு போன்ற பல நோக்கங்களுக்காக அனுப்பப்படுகின்றன.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியையும் இந்த செயற்கைக்கோள்கள் மூலம் அடைய முயற்சி செய்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

உலக நாடுகள் பல விண்ணிற்கு செயற்கைக்கோள்களை அனுப்பி இருந்தாலும் இதுவரை விண்வெளியில் அதிக செயற்கை கோள்களைக் கொண்ட எட்டு நாடுகளின் பட்டியல் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.

விண்ணில் அதிக செயற்கைக்கோள்களைக் கொண்ட 8 நாடுகள்:

அமெரிக்கா :

விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இதுவரை அமெரிக்கா 3415 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது.

பன்னாட்டு ஒத்துழைப்புகள் (Multinational) :

விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் விண்வெளி நிகழ்வுகள் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை எளிதாக்குவதற்காக சில நாடுகள் செயற்கைக்கோள் திட்டங்களில் ஒத்துழைக்கின்றன.

இவர்கள் இதுவரை 180 செயற்கைக்கோள்களை அனுப்பி வைத்து விண்ணில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனா :

பூமியைக் கண்காணிப்பதற்கான செயற்கைக்கோள்கள் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து விண்ணிற்கு சாட்டிலைட்டுகளை அனுப்பி வருகிறது சீனா. இதுவரை 535 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பியுள்ளது.

ரஷ்யா:

விண்வெளி ஆராய்ச்சிக்காக இதுவரை ரஷ்யா 170 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பியுள்ளது

ஜப்பான்:

தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் விண்வெளியில் இருந்து விரிவான சுற்றுச்சூழல் தரவு சேகரிப்பு, அத்தியாவசிய பணிகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்வதற்காகவே இதுவரை 88 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி வைத்து சாதனைப் படைத்துள்ளது ஜப்பான்.

இந்தியா:

வானிலை முன்னறிவுப்பு முதல் விண்வெளி ஆய்வு என பரந்த அளவிலான செயல்பாடுகளுக்கு உதவியாக இருப்பதற்காகவே இந்தியா இதுவரை 59 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.

கனடா:

விண்வெளி ஆராய்ச்சிக்காக இதுவரை 56 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது உலகளாவிய தொடர்பு நெட்வொர்க்குகளை ஆய்வு செய்வது முதல் விண்வெளியில் நடத்தப்படும் அறிவியல் சோதனைகளுக்கு உதவியாக உள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்