டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த மீன்கள்
அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த மீன்கள்.
வெதுவெதுப்பான நீரே இதற்கு காரணம் என்று கடல்சார் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அத்தனை மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெதுவெதுப்பான நீரே இவ்வளவு மீன்களின் இறப்புக்கு காரணம் என்பது தெரிந்தது.
குளிர்ந்த நீரில் அதிக அதிக ஆக்ஸிஜன் இருக்கும்; ஆனால் வெதுவெதுப்பான நீரில் ஆக்ஸிஜன் அவ்வளவாக இருக்காது. தண்ணீரின் வெப்ப அளவு 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது அதில் ஆக்ஸிஜன் குறைகிறது. அதை விட முக்கியமாக ஆழமான தண்ணீரை விட ஆழமற்ற பகுதியில் உள்ள தண்ணீர் அதிவேகத்தில் வெப்பமடையும்.
அந்த பகுதியில் தண்ணீர் செல்லும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீன்கள் பாதிப்படைந்து, ஒழுங்கற்ற முறையில் அதிவேகமாக, இயல்புக்கு மாறாக செயல்படும். இதனால் ஆக்ஸிஜன் அளவு மேலும் குறைந்து மீன்கள் இறந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் கால்வெஸ்டனில் உள்ள டெக்சாஸ் ஏஎம் பல்கலைக்கழகத்தின் கடல் வாழ் வசதி மேலாளர் கேட்டி செயிண்ட் கிளேர் கூறுகையில், காலநிலை மாற்றத்தால் கடல் நீர் அதிக அளவு வெப்பமடைந்து வருகிறது. இதன் பாதிப்பு சூழலியல் மாற்றத்தை உருவாக்கலாம்’ என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu