உலகின் மிகப்பெரும் கொடுமை அமெரிக்க தனிமை என்பது தெரியுமா?

உலகின் மிகப்பெரும் கொடுமை  அமெரிக்க தனிமை என்பது தெரியுமா?

பைல் படம்

நீங்கள் அனைவரும் ஏங்கும் அமெரிக்க வாழ்க்கையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அனைவரும் ஏங்கும் அமெரிக்க வாழ்க்கையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். இது பற்றி ஒரு அமெரிக்க தமிழர் எழுதியதை அப்படியே பதிவிடுகிறோம்: தனிமை அமெரிக்க வாழ்வின் பெருந்துயரங்களில் ஒன்று. ‘தனி மனிதச் சுதந்திரம்’ என்கிற பெயரில் அமெரிக்கர்கள் குடும்ப வாழ்க்கையை, உறவுமுறைகளை முழுமையாகச் சிதைத்து விட்டார்கள்.

இன்றைய இந்தியர்கள் காப்பியடித்துக் கொண்டிருக்கும் மேற்கத்திய கலாசாரம் இயற்கைக்கு முரணானது. கணவனும், மனைவியும், பெற்றோர்களும், பிள்ளைகளும் பணம் என்கிற ஒன்றை மட்டுமே குறியாக்கி, அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கர்களிடையே இன்றைக்குக் காணப்படும் மனச்சிதைவுக்கும், கலாசார அழுக்குகளுக்கும் அடிப்படைக் காரணமே அவர்களின் தனிமைதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

அமெரிக்க அரசாங்க நடைமுறைகளும் குடும்ப உறவுச் சிதைவை ஊக்கப்படுத்துகின்றன. பிளவுபட்ட குடும்பத்தின் ஒவ்வொரு தனி உறுப்பினரும் தனித்தனியே பொருளீட்டியாக வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் வீடு வாங்குவார்கள், கார் வாங்குவார்கள், மருத்துவ செலவு செய்வார்கள், பிற அத்தியாவசியச் செலவுகள் செய்வார்கள். அதன் மூலமாக அவர்கள் ஒவ்வொருவரும் ‘தனித்தனியாக’ அரசாங்கத்திற்கு வரிகட்டுவார்கள். அதுவே அமெரிக்க அரசிற்குத் தேவையே அன்றி, ஒன்றுபட்ட குடும்பம் ‘ஒற்றை’ வரியை மட்டுமே கட்டுவதல்ல.

நான் சொல்வது உங்களுக்கு அதிசயமாகத் தெரியலாம். ஆனால் நடைமுறை அதுதான். எங்கெல்லாம் பிடுங்கமுடியுமோ அங்கெல்லாம் பிடுங்குவது அமெரிக்க அரசின் வேலை. அது இல்லாவிட்டால் இத்தனை போர்கள் நடத்த பணம் எங்கிருந்து வரும்?

உங்களின் பதினெட்டு வயது நிரம்பிய மகளோ அல்லது மகனோ கல்லூரிக்கு படிக்கப் போவார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வீடு திரும்புவது என்பது அனேகமாக நிச்சயமில்லை. அவர்களே ஒரு வேலை தேடிக் கொண்டு அமெரிக்கச் சுழலில் மாட்டிக் கொண்டு தவிப்பார்கள்.

மீண்டும் அவர்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டிற்குத் திரும்புவது என்பது முடியவே முடியாத காரியம். விலைவாசியும், மாதாந்திர அத்தியாவசிய செலவுகளும், மருத்துவச் செலவுகளும் நிறைந்த அமெரிக்க வாழ்வில் முட்டி மோதி மூச்சடைத்துக் கிடக்கும் பெற்றோர்களால் அவர்களைப் பராமரிப்பது என்பது முடியாத காரியம். அமெரிக்க சிஸ்டம் அதனை அனுமதிப்பதில்லை. எங்கேயாவது போய் வேலை செய், எனக்கு வரி கொடு என்பது தான் அமெரிக்கச் சித்தாந்தம்.

விளைவு, ஏறக்குறைய ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் வரையிலான அமெரிக்கர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வேலை செய்வது, வீட்டிற்கு வருவது. மிஞ்சிப்போனால் வருடத்திற்கு ஒருமுறை எங்காவது வெக்கேஷனுக்குப் போவது. அல்லது அக்கம்பக்கத்து மாலுக்கோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுக்கோ போவது. அவ்வளவுதான் அவன் வாழ்க்கை.

அதற்கு மேலே என்ன செய்தாலும் பணம் செலவழிக்க வேண்டும். எனவே, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவன் தான் அதிகம். இரண்டு பெற்றோர்களும் வேலை செய்கிற வீட்டில் வசிக்கிற மகன் சும்மா இருப்பதில்லை. சரியான கண்காணிப்புகள் இல்லாததால் போதை மருந்து உபயோகம் அல்லது இண்டர்நெட்டில் வன்முறை விளையாட்டுக்கள்.

விவகரத்து செய்வதை ஊக்குவிக்கும் அமெரிக்கக் கலாசாரம், அவர்களின் பிள்ளைகளைப் பற்றி, அதனால் அவர்களுக்கு உண்டாகும் மனச்சிதைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

காரணம், புரியாத வயதில் பெற்றொர்களைப் பிரியும் குழந்தைகளின் மனது முழுமையாகச் சிதைவடைகிறது. அதுபோன்றவர்கள் எதிர்காலத்தில் மிகுந்த வன்முறை எண்ணம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். அவர்கள் தங்களின் பெற்றோர்களை முழுமையாக நிராகரிக்கிறார்கள். அவர்களைக் கைவிடுகிறார்கள்.

It’s a vicious cycle.மேற்கத்திய கலாசாரத்தை உயர்வாக நினைக்கும் இந்தியர்களால் இன்றைக்கு கூட்டுக் குடும்பமுறை தூக்கியெறியப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்நாள் முழுக்கத் தங்களுக்காக உழைத்த தங்களின் பெற்றோர்களை நடுவீதியில் துரத்தியடிக்கிறவர்களாக இன்றைய சமூகம் மெல்ல மாறிக் கொண்டிருப்பதனைக் காண்கிறேன்.

தன்னுடைய பிள்ளை அமெரிக்காவில் இருப்பதாக கண்கள் மின்னச் சொன்ன பெற்றோர்களை நினைத்துப் பார்க்கிறேன். தங்களின் நிலைமை இப்படியாகும் என்று ஒருபோதும் நினைத்திராதவர்கள் அவர்கள்.

அதேசமயம் அமெரிக்காவில் செட்டிலான மகனைக் குறை சொல்லி பிரயோஜனம் எதுவுமில்லை என்பதனையும் நாம் இங்கு கவனிக்கவேண்டும். தன்னுடைய பெற்றோர்களை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைப்படும் மகனுக்கு அது எளிதில் சாத்தியமாகக் கூடிய விஷயமில்லை.

ஏனென்றால், செலவுகள் அப்படியானவை. அப்படியே அவர்கள் வந்தாலும் அமெரிக்க வீடு ஒரு தனிமைச் சிறை என்பதினை உணர்ந்து நொந்து போவார்கள். ஊரில் நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ வாழ்ந்தவர்கள் ஆளரவமற்ற அமெரிக்கச் சாலைகளில் யாருடன் பேசமுடியும்? உறவாடமுடியும்?

இங்கு அழைத்து வந்தாலும் இந்த ஊரின் தனிமைச் சூழலில் அவர்களால் வாழ முடியவில்லை. அதற்கும் மேலாக மாமியாரை அனுசரித்துப் போகும் மருமகளை உலகம் அபூர்வமாகவே கண்டிருக்கிறது. It’s a universal problem. Nothing could be done.

கட்டுத்தளைகளை அறுத்துக் கொண்டு அமெரிக்காவை விட்டு விலகுவது என்பது எளிதான ஒன்றல்ல. அப்படியே இந்தியாவிற்கு வந்தாலும் நான் என்ன செய்து வாழமுடியும் என்கிற தயக்கம் இயங்கவே விடாது. காலையில் கண்விழித்துப் பார்க்கையில் கண்பார்வை முற்றிலும் மங்கலாகத் தெரிந்தது. இடது கண்ணில் உறுத்தல். கண்ணாடியைப் போட்டதும் எல்லாம் முப்பாரிமானத்தில் தெரிந்தது. Everything was blurry. எதுவுமே சரியாகத் தெரியவில்லை என்றதும் மனது பதைத்துவிட்டது. மனைவி, குழந்தைகள் இந்தியாவிற்குப் போயிருக்கிறார்கள்.

சனிக்கிழமையாதலால் என்னுடைய கண் மருத்துவர் அன்று இல்லை.... நண்பர்கள் இருவருக்கும் அன்று ஏதோ வேலை....யாருமின்றி தனியாக தட்டுத் தடுமாறி மருத்துவரிடம் சென்றேன்....

ஏதோ சொட்டு மருந்து தந்தார்.... திரும்பவும் போகனும்....இதை ஏன் சொல்கிறேன் என்றால்....தனிமை ஒரு கொடுமை...அமெரிக்காவில் தனிமை மிகப் பெரும் கொடுமை....!

Tags

Next Story