ரஷ்ய அதிபர் சிரிச்சு பார்த்திருக்கீங்களா? ஒரு மர்ம முடிச்சு..!

ரஷ்ய அதிபர் சிரிச்சு பார்த்திருக்கீங்களா? ஒரு  மர்ம முடிச்சு..!
X

வெவ்வேறு காலகட்டங்களில் புதின்.


மற்ற உலக தலைவர்களை ஒப்பிடும்போது ரஷ்ய அதிபர் ஏன் சிரித்த முகமாய் இருப்பதில்லை என்பது இங்கே செய்தியாக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி, ஒபாமா, டொனால்ட் டிரம்ப், இம்மானுவேல் மேக்ரான், ஜி ஜின்பிங் , ஏஞ்சலா மெர்க்கல், ஜேம்ஸ் ட்ரூடோ போன்ற தலைவர்களை பார்த்துவிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்-ஐ பார்த்தால் ஒரு பெரிய வேறுபாடு தெரியும். அது என்னவென்று உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஆமாம். அவர் சிரிப்பதே இல்லை. எதற்கும் உணர்ச்சிவசப்படாத மனிதர்.

உண்மையில், விளாடிமிர் புதின் மற்ற உலக தலைவர்களைப் போல் இல்லை. விளாடிமிர் புதின் யார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் அவரது கடந்த காலத்தைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்து இருக்கவேண்டும்.

விளாடிமிர் புதின் 16வது பிறந்த நாள் கொண்டாடிய குறுகிய காலத்திலேயே, ஸ்டாலினுக்கு பிந்தைய சோவியத் ஒன்றியத்தின் முக்கிய உளவுத்துறை சேவையான கேஜிபியில் இணைந்தார். விசாரணையை எதிர்க்கவும், எதிரியைக் கொல்லவும், சித்ரவதை செய்யவும் அவர் பயிற்றுவிக்கப்பட்டார்.

1980ம் ஆண்டுகளில் கேஜிபி -ல் புதின் பணியாற்றியபோது.

இந்த வகையான பயிற்சி ஒரு மனிதனை மனோரீதியாக என்றென்றும் மாற்றிவிடுகிறது. அடிப்படையில், விளாடிமிர் புதின் சிரிக்க மறுப்பவரோ அல்லது எரிச்சலூட்டும் ஒரு மனிதரோ அல்ல. ஆனால், அவர் பெற்ற பயிற்சி அவரின் இயல்பை மாற்றியுள்ளது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே, அது ரஷ்ய அதிபர் புதின் முகத்திலும் சரியாகியுள்ளது.

இப்போது, புதின் ரஷ்ய அதிபராக இருக்கிறார். ஆனாலும் புதின் தனது ஆரம்பகால கேஜிபி பயிற்சியில் இருந்து எதையும் இன்னும் இழக்கவில்லை. அதனால்தான் அவரால் எந்த உணர்ச்சிகளையும் வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லை. குறைந்தபட்சம் எல்லா சூழ்நிலைகளிலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடிகிறதே தவிர முகத்தில் உணர்ச்சிவசப்பட முடியாமல் இருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் மற்ற நாட்டுத் தலைவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள். ஏனெனில் சராசரி மனித உணர்வுகள் அவர்களுக்குள் புதைந்து கிடக்கிறது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா