பொருளாதார சீரழிவில் இலங்கை..! கொந்தளிப்பில் மக்கள்..!

பொருளாதார சீரழிவில் இலங்கை..! கொந்தளிப்பில் மக்கள்..!
X

பொருளாதார சீரழிவை எதிர்த்து இலங்கையில் போராட்டம் நடத்தும் மக்கள்.

இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டது. பொருளாதாரத்தை இந்த அரசாங்கம் தவறாக நிர்வகிக்கிறது. அந்நியச் செலாவணி நெருக்கடியை உருவாக்குகிறது. எரிபொருள், சமையல் எரிவாயு, பால் பவுடர் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறி கொழும்புவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதால், இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது ஆட்சியில் நாடு அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அதனால்,ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'இந்த ஆர்ப்பாட்டம் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான பிரச்சாரத்தின் ஆரம்பம் என்றார். இரண்டு வருடங்களாக நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள். நீங்கள் இன்னும் தொடர்ந்து கஷ்டப்பட முடியுமா?" என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதாகவும் அந்நியச் செலாவணி நெருக்கடியை உருவாக்குவதாகவும் எரிபொருள், சமையல் எரிவாயு, பால் பவுடர் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதால், இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இலங்கைக்கு உதவும் வகையில் 1பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியா இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா