தீவிரவாதிகளை திருமணம் செய்ய பெண்களை கட்டாயப்படுத்தும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பிடிபட்ட வீரர்களுக்கு மரண தண்டனை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை தலிபான்கள் நடத்தி வருகின்றனர்.
காபூலுக்கு தப்பி வந்த மக்கள், தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல்களையும் கைப்பற்றப்பட்ட வீரர்களை தூக்கிலிட்டதையும் கண்டதாகக் கூறுகிறார்கள். மேலும், அவர்கள் கூறுகையில், தலிபான்கள் திருமணமாகாத பெண்களை தங்கள் தீவிரவாதிகளுக்கு மனைவிகளாக வேண்டும் என்று பலவந்தப்படுத்துகின்றன. இது பாலியல் வன்முறையின் ஒரு விதம் என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன,
தலிபான்கள் தாங்கள் வெற்றிபெற்று அரசாங்க அதிகாரிகள், படைகள் மற்றும் மக்கள் தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் பயப்பட தேவையில்லை என்று கூறினர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் வேறுவிதமாக இருக்கிறது.
பல முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். வியாழக்கிழமை இரவு பயங்கரவாதக் குழு, கவர்னர் அலுவலகம் மற்றும் நகரத்தில் உள்ள மற்ற நிர்வாகக் கட்டிடங்களைக் கைப்பற்றிய பின்னர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரைக் கைப்பற்றியதாகக் கூறியது. இதுவரை, நாட்டில் 12 மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ளது.
தலிபான்களுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியவுடன் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுடன் தலிபான் சண்டையிட்டு வருகிறதுபோராடுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu