இலங்கை யாழ்ப்பாணம் பொதுச் சந்தை மூடல்

இலங்கை யாழ்ப்பாணம் பொதுச் சந்தை மூடல்
X
சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் கடை பிடிக்காததால் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வியங்காடு பொதுச் சந்தையை மூடினர். யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் நடவடிக்கையால் மூடப்பட்டுள்ளது. இன்று காலை பொதுச் சந்தை நடைபெற்ற போது யாழ்ப்பாண பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்காணிப்பதற்காகச் சென்றிருந்தனர்.

அப்போது சந்தையில் வியாபாரிகள் உட்பட பலர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். அத்துடன், சமூக இடைவெளியும் பேணப்படவில்லை. அதனால் எச்சரிக்கை செய்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கல்வியங்காடு பொதுச் சந்தையை மூட உத்தரவிட்டனர். அதிகாரிகள் நடவடிக்கையால் மூடப்பட்டது. மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story